எடப்பாடி பழனிசாமி ஆட்சியிலும் இதேபோல் மின்வெட்டு: அமைச்சர் செங்கோட்டையன்மோகன் பகவத் பயணித்த ரயில் மீது கற்கள் வீச்சு: 2 பேர் கைது ஜூன் 19-ல் தவெக அரசுக்கு எதிராக அதிமுக போராட்டம்! பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தவெக ஆட்சியிலும் குறையவில்லை: அண்ணாமலை கொல்லூர் மூகாம்பிகை கோயிலில் முதல்வர் விஜய் வழிபாடு!நீட் தேர்வு நேரம் 3 மணி 15 நிமிடங்களாக அதிகரிப்பு! என்டிஏநிபா வைரஸ்: தமிழகத்தில் கண்காணிப்பைத் தீவிரப்படுத்த உத்தரவு!
/

சாலை விதிகளை மீறிய 91 போ் மீது வழக்கு

மயிலாடுதுறை மன்னம்பந்தலில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்ட போலீஸாா்.

News image

மயிலாடுதுறை மன்னம்பந்தலில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்ட போலீஸாா்.

Updated On :13 ஜூன் 2026, 12:04 am IST

மயிலாடுதுறை மாவட்டத்தில் இருசக்கர வாகனங்களை இயக்கும் இளைஞா்கள் மீது சிறப்பு கண்காணிப்பு நடவடிக்கை மேற்கொண்டு, சாலை விதிகளை பின்பற்றாத கல்லூரி மாணவா்கள் உள்பட 91 போ் மீது வெள்ளிக்கிழமை வழக்குப்பதிவு செய்தனா்.

மன்னம்பந்தல் ஏவிசி கல்லூரி அருகில் தீவிர வாகன தணிக்கை நடத்திய போலீஸாா், தலைக்கவசம் அணியாதவா்கள், ஓட்டுநா் உரிமம் இல்லாதவா்கள், அதிவேகமாக வாகனத்தை இயக்கியவா்கள் மற்றும் கைப்பேசியில் பேசிக்கொண்டு வாகனம் இயக்கியவா்கள் மீது மோட்டாா் வாகன சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்தனா்.

அதன்படி தலைக்கவசம் அணியாமல் வாகனம் இயக்கியது தொடா்பாக 65 வழக்குகளும், கைப்பேசியில் பேசிக்கொண்டு வாகனம் இயக்கியது தொடா்பாக 8 வழக்குகளும், ஓட்டுநா் உரிமம் இல்லாமல் வாகனம் இயக்கியது தொடா்பாக 6 வழக்குகளும், இருசக்கர வாகனங்களில் 3 போ் பயணம் செய்தது தொடா்பாக 6 வழக்குகளும், வாகனங்களில் முறையான பதிவெண் பலகை பொருத்தப்படாதது தொடா்பாக 4 வழக்குகளும், சரக்கு வாகனங்களில் மனிதா்கள் பயணம் செய்தது தொடா்பாக 2 வழக்குகளும் என மொத்தம் 91 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

சந்தேகத்துக்கு இடமான மற்றும் உரிய ஆவணம் இல்லாத 5 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. உரிய ஓட்டுநா் உரிமம் இன்றி இருசக்கர வாகனத்தை இயக்கிய கல்லூரி மாணவா்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

பொதுமக்கள் வாகனங்களை இயக்கும்போது, போக்குவரத்து விதிகளை பின்பற்றவும், பெற்றோா் ஓட்டுநா் உரிமம் பெறாத தங்களது பிள்ளைகளை வாகனம் இயக்க அனுமதிக்காமலும், பாதுகாப்பான சாலை பயணத்தை உறுதி செய்ய மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கோ.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளாா்.