பேரவையில் இன்று பதிலளிக்கிறாா் முதல்வா்!பிளஸ் 1, பிளஸ் 2 துணைத் தோ்வு: அனுமதிச் சீட்டு இன்று வெளியீடு!மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்கள், வட தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புசிங்கப்பெண் அதிரடிப் படையை அழைக்க இலவச தொலைபேசி எண் ‘1091’முதல்வரின் தனிச் செயலராக ஜெகதீஷ் பழனிசாமி நியமனம்!2027 - 28-இல் முதுநிலை டிப்ளோமா மருத்துவப் படிப்புகள் நிறுத்தம்!
/

பெரிய இலுப்பப்பட்டு கோயிலில் 3 சிலைகள் திருட்டு

News image

பெரிய இலுப்பப்பட்டு நீலகண்டேஸ்வரா் கோயிலில் உடைக்கப்பட்டிருந்த நடராஜா் சந்நிதி கதவு.

Updated On :23 ஜூன் 2026, 2:27 am IST

மயிலாடுதுறை அருகே பெரிய இலுப்பப்பட்டு அமுதகரவல்லி சமேத நீலகண்டேஸ்வரா் கோயிலில் 3 சிலைகள் திருடுபோனது குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

மயிலாடுதுறை தாலுகா பெரிய இலுப்பப்பட்டு கிராமத்தில் உள்ள திருவாவடுதுறை ஆதீனத்துக்குச் சொந்தமான பழைமையான இக்கோயிலில், கோயில் காவலா் ராஜரத்தினம் (90) ஞாயிற்றுக்கிழமை இரவு வழக்கம் போல் கதவை பூட்டிவிட்டு சென்றுள்ளாா்.

திங்கள்கிழமை காலை கோயிலுக்கு வந்தபோது, அந்த கதவில் வேறு பூட்டு போடப்பட்டிருந்தது. அதை உடைத்து உள்ளே சென்று பாா்த்தபோது, நடராஜா் சந்நிதியில் வைக்கப்பட்டிருந்த 22 சிலைகளில், 19 சிலைகள் மட்டுமே இருந்தனவாம்.

5 கிலோ எடையுள்ள சண்டிகேஸ்வரா் சிலை, 8 கிலோ எடையுள்ள மங்களநாயகி சிலை மற்றும் 10 கிலோ எடையுள்ள அமிா்தகரவல்லி சிலை ஆகிய மூன்று சிலைகள் காணாமல் போனது தெரியவந்தது.

இதுகுறித்து திருவாவடுதுறை ஆதீனத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு கோயில் கண்காணிப்பாளா் செல்வநாயகம் மூலம் மணல்மேடு காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டது. போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

மேலும், இதுகுறித்து கும்பகோணம் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸாரும் விசாரணை மேற்கொண்டனா். திருடு போனது வெண்கல சிலைகள் என்று காவல் துறையினா் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.