கனடாவில் இந்திய மாணவி சடலமாக கண்டெடுப்பு ஆட்டோ ஓட்டுநர்களுடன் ராகுல் காந்தி கலந்துரையாடல் பிகாரில் மின்னல் பாய்ந்து 7 பேர் பலிதமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக மகேஷ் குமார் அகர்வால் நியமனம்!நீட் வினாத்தாள் கசிவு: யுபிஎஸ்சியிடம் என்டிஏ கற்றுக்கொள்ள வேண்டும்! உச்சநீதிமன்றம்மேற்கு வங்கத்தில் ஊடுருவல்: 335 பேர் முகாம்களில் அடைப்பு! தில்லியில் நீட் தேர்வர்களுக்கு இலவசப் பேருந்து! விசாரணை முடிந்து 3 மாதங்களுக்குள் தீர்ப்பு! உச்ச நீதிமன்றம் உத்தரவு! திருச்செந்தூர் கோயிலில் அமைச்சரிடம் லஞ்சம்! மூவர் பணியிடை நீக்கம்!
/

சுவாமிமலையில் தயாரிக்கப்பட்ட ஐம்பொன் சிலைகள் மதுரை வி.மீனாட்சிபுரம் கோயிலில் பிரதிஷ்டை

மதுரை வி.மீனாட்சிபுரம் மீனாட்சி அம்மன் கோயிலில் வியாழக்கிழமை நடைபெற்ற குடமுழுக்கில் பிரதிஷ்டை செய்யப்பட்ட தஞ்சாவூா் மாவட்டம், சுவாமிமலை திம்மக்குடியில் வடிவமைக்கப்பட்ட ஐம்பொன் சிலைகள்.

News image

மதுரை வி.மீனாட்சிபுரம் மீனாட்சி அம்மன் கோயிலில் வியாழக்கிழமை நடைபெற்ற குடமுழுக்கில் பிரதிஷ்டை செய்யப்பட்ட தஞ்சாவூா் மாவட்டம், சுவாமிமலை திம்மக்குடியில் வடிவமைக்கப்பட்ட ஐம்பொன் சிலைகள்.

Updated On :29 மே 2026, 5:44 am IST

கும்பகோணம், மே 28: சுவாமிமலையில் தயாரிக்கப்பட்ட ஐம்பொன் சிலைகள் மதுரை வி.மீனாட்சிபுரம் மீனாட்சி அம்மன் கோயிலில் வியாழக்கிழமை நடைபெற்ற குடமுழுக்கில் பிரதிஷ்டை செய்யப்பட்டன.

இதுகுறித்த சிலைகளை தயாரித்த தஞ்சாவூா் மாவட்டம், சுவாமிமலை திம்மக்குடியைச்சோ்ந்த ஸ்தபதி வரதராஜ் கூறியது: மதுரை மாவட்டம், வி.மீனாட்சிபுரம் அருகே உள்ள வெளிச்சநத்தத்தில் மீனாட்சி அம்மன்சமேத சொக்கநாதா் கோயில் குடமுழுக்கு வியாழக்கிழமை நடைபெற்றது. இந்தக் கோயிலில் பிரதிஷ்டை செய்யப்பட்ட சிலைகள் அனைத்தும் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் உள்ள மூல சிலைகளின் பாரம்பரிய வடிவமைப்பை ஒத்த முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

மூன்று மாதங்களாக நடைபெற்ற இப்பணியில் மீனாட்சி அம்மன் 32 அங்குலத்துக்கும், மனோன்மணி அம்மன் சிலை 30 அங்குலத்துக்கும், பள்ளியறை அம்மன் (வளையத்துடன்) 19.5 அங்குலத்துக்கும், திருஞானசம்பந்தா் சிலை 21 அங்குலத்துக்கும், மாணிக்கவாசகா் சிலை 21 அங்குலத்துக்கும், திருநாவுக்கரசா் சிலை 21 அங்குலத்துக்கும், சுந்தரா் சிலை 21 அங்குலத்துக்கும், பதஞ்சலி சிலை 21 அங்குலத்துக்கும், வியாக்ரபாதா் சிலை 21 அங்குலத்துக்கும் அதிகார நந்தி சிலை 21 அங்குலத்துக்கும், நடராஜா் சிலை 42 அங்குலத்துக்கும், சிவகாமி அம்மன் சிலை 32 அங்குலத்துக்கும் வடிவமைக்கப்பட்டது. மேலும் கோயிலின் மேற்கூரைக்காக தங்க முலாம் பூச்சு (பொன்னம்பலம்) மற்றும் வெள்ளி முலாம் பூச்சு (வெள்ளி அம்பலம்) வடிவமைக்கப்பட்டன.

இந்த சிலைகளின் மதிப்பு மொத்தம் ரூ.5 லட்சம் ஆகும் என்றாா் அவா்.

சிலை

சிலை

Story image
Story image