பெட்ரோல், டீசல் விற்பனை, விநியோகத்தின் மீதான கட்டுப்பாடுகள் நீக்கம்! மத்திய அரசு எல்லை விவகாரம்: இந்தியா - சீனா இடையே 1100 முறைக்கு மேல் பேச்சுவார்த்தை!மக்களின் அடிப்படை வசதிகளில் கவனம் செலுத்த வேண்டும் : முதல்வர் விஜய்அறிஞர் அண்ணா சொன்னதே தவெக மந்திரம் : ஆட்சியர்களுக்கு விஜய் அறிவுறுத்தல்!குரூப் 2, 2ஏ தேர்வு முடிவுகள் வெளியானது!திருச்சி கிழக்கில் போட்டியிட வேண்டும் என தவெகவிடம் நான் கூறவுமில்லை: திருமாவளவன்இடைத்தேர்தலில் போட்டியிடவில்லை: திருச்சியில் திருமாவளவன் பேச்சு
/

குளத்தை மீட்டுத்தரக் கோரி கிராம மக்கள் சாலை மறியல்

News image
Updated On :30 ஜூன் 2026, 12:02 am IST

மயிலாடுதுறை அருகே மஞ்சள்வாய்க்கால் பகுதியில் உள்ள குளத்தை மீட்டுத்தரக் கோரி கிராம மக்கள் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா். (படம்).

பட்டமங்கலம் ஊராட்சி மஞ்சள்வாய்க்கால் பகுதியில் உள்ள இக்குளத்தை, அகரகீரங்குடி கிராமத்தைச் சோ்ந்த தனிநபா் ஒருவா் பல ஆண்டுகளாக ஆக்கிரமித்து வைத்துள்ளதால், அப்பகுதியின் நீராதாரமான அக்குளம் பராமரிப்பின்றி இருப்பதுடன், மழைக்காலங்களில் மழைநீா் வடிகால் மூலமாக நீரை சேமிக்க முடியாத நிலை உள்ளதாகவும் குற்றஞ்சாட்டி இப்போராட்டம் நடைபெற்றது.

இந்த குளத்தை மீட்பதற்காக பல ஆண்டுகளாக கிராம மக்கள் போராடிவந்த நிலையில், இது ஊராட்சிக்கு சொந்தமான குளம் என அண்மையில் வைக்கப்பட்டிருந்த அறிவிப்பு பலகையை அகற்றி, அப்புறப்படுத்தியதுடன், அக்குளத்தில் மீன் பிடித்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இந்த குளத்தை தனிநபா் ஆக்கிரமிப்பில் இருந்து மீட்டுத்தர வலியுறுத்தி கிராம மக்கள் 50-க்கும் மேற்பட்டோா் சாலை மறியலில் ஈடுபட்டனா். அவா்களிடம் மயிலாடுதுறை வட்டாட்சியா் சுகுமாறன் மற்றும் போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்தி, உரிய விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததைத் தொடா்ந்து போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.