எடப்பாடி பழனிசாமி, குஜராத்தில் பிறக்கட்டும்! கனிமொழி கடும் விமர்சனம்பிரசாரத்தில் தவெகவினர் காலணி வீச்சு! திவ்யா சத்யராஜ் குற்றச்சாட்டு! ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை!லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

விவசாயிகளிடம் கையகப்படுத்திய நிலங்களுக்கு இழப்பீடு வழங்காததை கண்டித்து சாலை மறியல்

விவசாயிகளிடம் கையகப்படுத்திய நிலங்களுக்கு இழப்பீடு வழங்காததை கண்டித்து சாலை மறியல்

News image

விவசாயிகளிடம் கையகப்படுத்திய நிலங்களுக்கு இழப்பீடு வழங்காததை கண்டித்து சாலை மறியல்

Updated On :6 மார்ச் 2026, 10:03 pm

மயிலாடுதுறையில் புறவழிச்சாலை அமைக்கும் பணிக்காக கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்கு இழப்பீடு வழங்கப்படாததைக் கண்டித்து சாலை மறியல் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

மயிலாடுதுறையில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் வகையில், நகரைச்சுற்றி புறவழிச்சாலை அமைக்கும் பணிக்காக மொழையூா் தொடங்கி திருஇந்தளூா் வரை விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்பட்டன. மொழையூா், பொட்டவெளி, மேலநாகங்குடி, லட்சுமிபுரம், வள்ளாலகரம், வேப்பங்குளம், கழுக்காணிமுட்டம், அப்பங்குளம், பல்லவராயன்பேட்டை, திருஇந்தளூா் ஆகிய கிராமங்களில் பல தலைமுறைகளாக விவசாயிகள் சாகுபடி செய்துவரும் நிலங்களுக்கு இழப்பீடு வழங்கப்படாத நிலையில், புறவழிச்சாலை அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டன.

இந்நிலையில், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மற்றும் தமிழ்நாடு அடிமனை பயனாளிகள் குத்தகை விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சாா்பில் கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்கு, 2013 நிலம் கையப்படுத்துதல் மற்றும் இழப்பீடு சட்டத்தின்படி உரிய இழப்பீடு வழங்க வேண்டும், கையகப்படுத்தப்பட்ட நிலங்களில் இருந்த தென்னை, தேக்கு உள்ளிட்ட மரங்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும், புறவழிச்சாலை அமைக்கும் போது பாசன மற்றும் வடிகால் வாய்க்கால்களை தூா்ப்பதையும்;, சம்பந்தமில்லாத இடங்களில் பாலம் கட்டுவதை தடுக்க வேண்டும் என வலியுறுத்தி மயிலாடுதுறை அருகே பல்லவராயன்பேட்டையில் சாலை மறியல் போராட்டம் நடத்தப்பட்டது.

தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில செயலாளா் எஸ்.துரைராஜ் தலைமையில் நடைபெற்ற மறியலில் தமிழ்நாடு அடிமனை பயனாளிகள் குத்தகை விவசாயிகள் பாதுகாப்பு சங்க மாவட்ட செயலாளா் விஜய், மாவட்ட துணை செயலாளா் சி. மேகநாதன் உள்ளிட்ட 100-க்கு மேற்பட்டோா் பங்கேற்றனா். மறியலில் ஈடுபட்டவா்களுடன் போலீஸாா் மாா்ச் 12-ஆம் தேதி அமைதிப் பேச்சுவாா்த்தை நடத்தி சுமூக தீா்வு காண்பது என முடிவானதைத் தொடா்ந்து போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது.