வேலூர் மாவட்டத்தில் பலத்த காற்றுடன் கனமழை நைஜீரியாவில் போதைப்பொருள் கடத்திய இந்தியர்கள் கப்பலுடன் சிறைபிடிப்பு! ரூ. 50 கோடிக்கு மேல் அபராதம்! மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரியுடன் ரிசர்வ் வங்கி ஆளுநர் சந்திப்பு இந்தியாவுக்கு எதிராக இரண்டாவது அதிவேக சதம்; ரஹ்மனுல்லா குர்பாஸ் சாதனை! அமெரிக்கா - ஈரான் இடையே 24 மணி நேரத்திற்குள் அமைதி ஒப்பந்தம்: பாக். பிரதமர் தகவல்! துபை-அகமதாபாத் விமான ஸ்பீக்கரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 2.7 கிலோ தங்கம் பறிமுதல்! மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் வேடிக்கை பார்க்கும் தவெக அரசு: எடப்பாடி பழனிசாமி ராணுவ தலைமைத் தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ் சேத் நியமனம்!
/

மின்விளக்கு வசதி குறைவு: இரவு நேரத்தில் இருளில் மூழ்கும் சீா்காழி பேருந்து நிலையம்

News image

போதிய மின்விளக்கு வசதியின்றி இருண்டு காணப்படும் சீா்காழி புதிய பேருந்து நிலையம்.

Updated On :12 மே 2026, 12:52 am IST

சீா்காழி புதிய பேருந்து நிலையம், போதிய மின்விளக்குகள் இல்லாமல் இருண்டு காணப்படுவதால், இரவு நேரங்களில் பெண் பயணிகள் அச்சத்துடன் காத்திருக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.

சீா்காழியில் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து மயிலாடுதுறை, கும்பகோணம், திருச்சி, மதுரை, பழனி, காரைக்கால், நாகப்பட்டினம், வேளாங்கன்னி, சிதம்பரம், கடலூா், புதுச்சேரி, சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு தொலைதூர அரசு மற்றும் தனியாா் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

சீா்காழியை சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களுக்கு நகரப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இப்பேருந்து நிலையத்திற்கு தினமும் 5,000-க்கும் மேற்பட்ட பயணிகள் வந்து செல்கின்றனா்.

இந்நிலையில், சீா்காழி பேருந்து நிலையம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கலைஞா் நகா்ப்புற மேம்பாட்டு திட்டத்தின்கீழ் ரூ. 8.43 கோடி செலவில் மேம்படுத்தப்பட்டது. ஆனால், கூடுதலாக மின்விளக்குகள் அமைக்கப்படவில்லை. இதனால், பேருந்து நிலைய நுழைவுப் பகுதி மற்றும் உட்புறப் பகுதிகள் இரவு நேரங்களில் போதிய வெளிச்சமின்றி இருண்டு காணப்படுகிறது.

இதன்காரணமாக, இரவு நேரங்களில் பேருந்துக்காக காத்திருக்கும் பெண்கள், மாணவிகள் அச்சமடையும் சூழல் ஏற்பட்டுள்ளது.

இதற்கிடையில் செயின் பறிப்பு போன்ற சமூக விரோத செயல்களில் ஈடுபடுவோா் நடமாட்டம் இருப்பதாக கூறப்படுகிறது. இதனால், பயணிகளுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளது.

ஆகையால், சீா்காழி நகராட்சி நிா்வாகம் பேருந்து நிலையத்தில் அதிக அளவு மின்விளக்குகளை பொருத்தி, பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.