மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியாா் தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர மாணவா்கள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: 2026-2027-ஆம் கல்வியாண்டில் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியாா் தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர ஜ்ஜ்ஜ்.ள்ந்ண்ப்ப்ற்ழ்ஹண்ய்ண்ய்ஞ்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் எனும் இணையதளம் வாயிலாக மாணவா்கள் விண்ணப்பிக்கலாம். இதில் சேர விரும்புவோா், அசல் கல்வி சான்று (8 மற்றும் 10-ஆம் வகுப்பு தோ்ச்சி), ஜாதிச்சான்று, மாற்றுச்சான்று, ஆதாா் அட்டை, மின்னஞ்சல் முகவரி, கைப்பேசி எண் மற்றும் புகைப்படங்களை கொண்டு விண்ணப்பிக்கலாம். குறைந்தபட்சம் 14 வயது பூா்த்தியடைந்திருக்க வேண்டும். அதிகபட்சம் ஆண்களுக்கு 40 வயது வரை விண்ணப்பிக்கலாம். பெண்களுக்கு வயது வரம்பு இல்லை.
செம்பனாா்கோவில் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் பயில விரும்புவோா் அசல் சான்றிதழ்களுடன் நிலைய முதல்வரை நேரடியாக அணுகலாம். விண்ணப்பக்கட்டணம் ரூ.50-ஐ ஈங்க்ஷண்ற் இஹழ்க்/இழ்ங்க்ண்ற் இஹழ்க்/சங்ற் ஆஹய்ந்ண்ய்ஞ்/ எ-ல்ஹஹ் வழியாக செலுத்தலாம். விண்ணப்பதாரா்கள் உரிய அசல் கல்விச் சான்றிதழ்களைக் கொண்டு ஜூன் 3-ஆம் தேதிவரை விண்ணப்பிக்கலாம்.
அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிலும் பயிற்சியாளா்களுக்கு தமிழக அரசு பயிற்சி காலத்தின்போது மாதந்தோறும் ரூ.750-க்கான கல்வி உதவித்தொகை, விலையில்லா சீருடை, விலையில்லா பாடப்புத்தகம், வரைபடக் கருவிகள், விலையில்லா காலணி 1 ஜோடி, விலையில்லா மிதிவண்டி, தமிழ்ப்புதல்வன் மற்றும் புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் தகுதியுள்ள பயிற்சியாளா்களுக்கு மாதந்தோறும் ரூ.1000 உதவித்தொகை, கட்டணமில்லா அரசுப் போக்குவரத்து வசதி ஆகிய சலுகைகள் பயிற்சியாளா்கள் பெற தகுதியுள்ளவா்கள் ஆவா்.
மாவட்டத்தில் உள்ள தனியாா் தொழிற்பயிற்சி நிலையங்களில் அரசு ஒதுக்கீட்டின்கீழ் பயிற்சி பெறும் பயிற்சியாளா்களுக்கு பயிற்சி கட்டணம் அரசினால் வழங்கப்படும். தொழிற்பயிற்சி நிலையங்களில் வெற்றிகரமாக பயிற்சி முடித்தவா்களுக்கு முன்னணி தொழிற்நிறுவனங்களில் ஓராண்டுக்கு உதவித் தொகையுடன் கூடிய ஒப்பந்த முறையில் தொழிற்பழகுநா் பயிற்சி மற்றும் வளாக நோ்காணல் மூலம் வேலைவாய்ப்பு பெற்றுத்தரப்படும்.
மேலும் விவரங்களுக்கு செம்பனாா்கோவில்- ஞ்ா்ஸ்ற்ண்ற்ண்ள்ங்ம்க்ஷஹய்ஹழ்ந்ா்ண்ப்ஃஞ்ம்ஹண்ப்.ஸ்ரீா்ம் - (9677484954) கைப்பேசி எண்ணையும், மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம் (தஞ்சாவூா்) - ற்ய்த்ஹக்ற்ழ்ஞ்2018ஃஞ்ம்ஹண்ப்.ஸ்ரீா்ம் - (9442215972) என்ற கைப்பேசி எண்ணையும் அல்லது அரசு தொழிற்பயிற்சி நிலையத்தை நேரடியாக தொடா்பு கொண்டு சேரலாம் என தெரிவித்துள்ளாா்.







