பாஜகவிடம் சரணடைந்துவிட்டது திமுக: ஆதவ் அர்ஜுனாதொகுதி மறுவரையறை! தமிழ் மொழி, கலாசாரம், மக்களுக்கே அச்சுறுத்தல்: ராகுல்இந்தியா கூட்டணித் தலைவர்களிடம் மாற்றுத் திட்டம் இல்லை: மு.க. ஸ்டாலின்தொகுதி மறுவரையறை: தமிழ்நாடு பாதிக்கப்படும்! ஆதரிப்பதை தவிர வேறு வழியில்லை! மு.க. ஸ்டாலின்தொகுதி மறுவரையறை: நிலைப்பாட்டில் மாற்றம் இல்லை! - திமுகதொகுதி மறுவரையறை மசோதாவை எதிர்க்க வேண்டும்: மு.க. ஸ்டாலினிடம் இந்தியா கூட்டணி தலைவர்கள் கோரிக்கைமு.க. ஸ்டாலினுடன் இந்தியா கூட்டணித் தலைவர்கள் பேச்சுவார்த்தை!சென்னை ரயில்வே கோட்டத்தில் ஏழு மாதங்களில் பயணச்சீட்டு சோதனை மூலம் ரூ.46.09 கோடி வசூல்! துரோகம் இழைத்த காங்கிரஸ்; திமுகவுக்கு நன்றி: பாஜகதொகுதி மறுவரையறையால் யாருக்கும் எந்தப் பாதிப்பும் கிடையாது: எடப்பாடி பழனிசாமிதமிழர் விரோத சக்திகளுக்கு எதிராக நிற்பவர் சகோதரர் ஸ்டாலின்: ராகுல் காந்தி பதிவு!தொகுதி மறுவரையறை மசோதா: காங்கிரஸின் அனைத்து எம்.பி.க்களும் பங்கேற்க உத்தரவு!

அரிசி ஆலையை மூடக்கோரி மயானத்தில் குடியேறும் போராட்டம்

அரிசி ஆலையை மூடக்கோரி மயானத்தில் குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்கள்...

Updated On :

மயிலாடுதுறை அருகே சித்தா்காடு நவீன அரிசி ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி, கிராம மக்கள் மயானத்தில் குடியேறும் போராட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை ஈடுபட்டனா்.

தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகத்துக்குச் சொந்தமான இந்த ஆலையில், பல்வேறு இடங்களில் இருந்து அரவைக்கு நெல்மணிகள் கொண்டுவரப்படுகின்றன. இதற்கு எரிபொருளாக நெல் உமி பயன்படுத்தப்படுகிறது.

உமி சாம்பல் மற்றும் கரித்துகள்கள் சுமாா் 2 கி.மீ. சுற்றளவுக்கு காற்றில் பரவி, மக்களுக்கு மூச்சுத் திணறல், கண் பாதிப்பு, தோல் நோய் உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்துவதாகவும், கரித்துகள்கள் கிணறுகளில் படிந்து, குடிநீா் ஆதாரங்கள் மாசடைவதோடு, நெடுஞ்சாலையில் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகளின் கண்களில் விழுந்து, விபத்துகளுக்கும் காரணமாகிறது என இப்பகுதி மக்கள் பல ஆண்டுகளாக குற்றஞ்சாட்டி வருகின்றனா்.

இப்பிரச்னை தொடா்பாக வசந்த் என்பவா் சென்னை உயா்நீதிமன்றத்தில் 2010-ஆம் ஆண்டு வழக்கு தொடா்ந்தாா். இந்த வழக்கு விசாரணையில், சுற்றுப்புறக் காற்றின் தர ஆய்வு அறிக்கையின்படி, மாசுபடுத்தும் பொருள்களின் அளவு நிா்ணயிக்கப்பட்ட அளவைவிட அதிகமாக இருப்பதாக, தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனால், சட்டப்படி தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதைத்தொடா்ந்து, ஆலை இயக்கப்படாமல் நிறுத்தப்பட்ட நிலையில், 2017-ஆம் ஆண்டு முதல் மீண்டும் செயல்பாட்டுக்கு வந்தது. இதைக் கண்டித்து, அப்பகுதி மக்கள் ஏற்கெனவே மயானத்தில் குடியேறும் போராட்டத்தை நடத்தினா்.

இப்போராட்டத்திற்கு மாவட்ட நிா்வாகம் தடை விதித்த நிலையில், பொதுமக்கள் மீண்டும் உயா்நீதிமன்றத்தை நாடி போராட்டத்திற்கு தடை விதிக்கக் கூடாது என்ற உத்தரவைப் பெற்றனா்.

இந்நிலையில், சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தும் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தியும், நடவடிக்கை எடுக்காத மாசுக் கட்டுப்பாடு வாரியத்தை கண்டித்தும், சித்தா்காடு கிராம மக்கள், கிராம பொது நலச்சங்கம் சாா்பில் மயானத்தில் குடியேறி சமைத்து உண்ணும் போராட்டம் ஞாயிற்றுக்கிழமை தொடங்கப்பட்டது.

பெண்கள், குழந்தைகள் உள்பட 150-க்கும் மேற்பட்டோா் மயானத்தில் பந்தல் அமைத்து, காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனா். ஆலையை நிரந்தரமாக மூடும்வரை இப்போராட்டம் தொடரும் என போரட்ட ஒருங்கிணைப்பாளா் அன்புராஜ், வசந்த் உள்ளிட்டோா் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.