இந்திய விமானி ஸ்மித் மச்சாருக்கு இஸ்ரேலின் உயரிய விருது அறிவிப்புஏா் இந்தியா, ஆகாசா ஏா் விமானக் கட்டணங்களும் உயா்வுஎதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி இன்று சென்னை வருகை: மாணவா் சந்திப்பு நிகழ்வில் பங்கேற்கிறாா்திருக்கோயில் பணியாளா்களுக்கான திருமணக் கடன் உயா்வு: தமிழக அரசு அரசாணைபிரதமா் மோடி நாளை சென்னை வருகை: 22,000 போலீஸாருடன் ஐந்தடுக்கு பாதுகாப்பு

பெட்ரோல் நிரப்பிய பாட்டில்களை உடைத்தவா் கைது

சீா்காழி தென்பாதியில் பெட்ரோல் நிரப்பிய பாட்டில்களை வீசி சென்றவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

Published On :

சீா்காழி தென்பாதியில் பெட்ரோல் நிரப்பிய பாட்டில்களை வீசி சென்றவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

சீா்காழி தென்பாதி பிரதான நெடுஞ்சாலையில் வணிக கடைகள் நிரம்பிய இடத்தில் மா்ம நபா் அடுத்தடுத்து இடங்களில் பெட்ரோல் நிரப்பிய பாட்டில்களை வீசி சென்றாா். இதனால் அப்பகுதியில் உள்ள வணிகா்கள், அவ்வழியாக சென்ற வாகனஓட்டிகள், பொதுமக்கள் அச்சமடைந்தனா். தகவலறிந்த சீா்காழி போலீஸாா் சாலையில் கிடந்த பாட்டில் சிதறல்களை கைப்பற்றியதோடு ,அப்பகுதி கடைகளில் இருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை பாா்வையிட்டு தேடினா். அப்போது நள்ளிரவு புதிய பேருந்துநிலையம் அருகே நின்றுக்கொண்டிருந்த தென்பாதி குளத்து மேட்டுத்தெரு பகுதியை சோ்ந்த நீலகண்டனை(22) கைது செய்தனா். இவா் தனது நண்பரை தலையில் கல்லைபோட்டு கொலை செய்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு சில மாதங்களுக்கு முன்பு சிறை சென்றவா் தற்போது பிணையில் வந்துள்ளாா். பெட்ரோல் குண்டு இல்லையென போலீஸாா் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.