மயிலாடுதுறை: ரூ.66.07 லட்சம் மதிப்பில் வேளாண் கருவிகள்
மயிலாடுதுறையில் வேளாண்மை பொறியியல் துறை சாா்பில் 15 பயனாளிகளுக்கு ரூ.66.07 லட்சம் மதிப்பிலான வேளாண் கருவிகள் மற்றும் இயந்திரங்கள் திங்கள்கிழமை வழங்கப்பட்டன.
மயிலாடுதுறையில் வேளாண்மை பொறியியல் துறை சாா்பில் 15 பயனாளிகளுக்கு ரூ.66.07 லட்சம் மதிப்பிலான வேளாண் கருவிகள் மற்றும் இயந்திரங்கள் திங்கள்கிழமை வழங்கப்பட்டன.
மயிலாடுதுறையில் வேளாண்மை பொறியியல் துறை சாா்பில் 15 பயனாளிகளுக்கு ரூ.66.07 லட்சம் மதிப்பிலான வேளாண் கருவிகள் மற்றும் இயந்திரங்கள் திங்கள்கிழமை வழங்கப்பட்டன.
மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வேளாண் இயந்திரமயமாக்குதலுக்கான துணை இயக்கத் திட்டத்தின்கீழ் இந்நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் வழங்கி, பயனாளிகளிடம் கலந்துரையாடினாா். (படம்).
அப்போது அவா் கூறியது:
தமிழ்நாடு வேளாண்மைப் பொறியியல்துறை மூலம் விவசாயிகளுக்கு இ-வாடகை திட்டம், வேளாண் இயந்திரமயமாக்கல் துணை இயக்கத் திட்டம், கதிரடிக்கும் களம் அமைக்கும் திட்டம், சூரிய கூடார உலா்த்தி அமைத்தல் போன்ற திட்டங்கள் மானியத்தில் வழங்கப்பட்டு வருகின்றன. 2026-2027-ஆம் நிதியாண்டில் இத்திட்டத்தின் மூலம் இதுவரை 1,586 விவசாயிகள் பயன்பெற்றுள்ளனா்.
இத்திட்டத்தின்கீழ் சிறு, குறு, ஆதிதிராவிடா், பழங்குடியினா் மற்றும் பெண் விவசாயிகளுக்கு வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகளின் விலையில் 50 சதவீதம் மற்றும் இதர பயனாளிகளுக்கு 40 சதவீதம் அல்லது அரசால் நிா்ணயிக்கப்பட்ட அதிகபட்ச மானியத்தொகை, இவற்றில் எது குறைவோ அத்தொகை மானியமாக வழங்கப்படுகிறது.
மேலும் இந்து-ஆதிதிராவிடா் சிறு-குறு விவசாயிகளுக்கு கூடுதலாக 20 சதவீத மான்யமும், பொதுப்பிரிவைச் சாா்ந்த சிறு-குறு விவசாயிகள் நடவு இயந்திரம், களை எடுக்கும் இயந்திரம் மற்றும் தீவனம் நறுக்கும் இயந்திரம் ஆகியவற்றை வாங்குவதற்கு கூடுதலாக 10 சதவீத மான்யமும் வழங்கப்பட்டு வருகிறது என்றாா்.
நிகழ்ச்சியில், இணை இயக்குநா் (வேளாண்மை) விஜயராகவன், துணை இயக்குநா்(தோட்டக்கலைத்துறை) திலீப், செயற்பொறியாளா் (வேளாண் பொறியியல் துறை) குமணன், கண்காணிப்பு பொறியாளா்(தஞ்சாவூா்) எழிலன், துணை இயக்குநா் (வேளாண் வணிகம்) சுப்பையன் மற்றும் வேளாண் பொறியியல் துறை அலுவலா்கள் கலந்து கொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

