ஜனநாயகன் படம் எடுத்தால் மட்டும் போதாது... விஜய் சேதுபதிக்கு ஆதரவாக சீமான் பேச்சுஆந்திர முன்னாள் துணை முதல்வர் மாரடைப்பால் காலமானார்மீனாட்சியம்மன் குடமுழுக்கு: தாம்பரம் - மதுரை இடையே 2 முன்பதிவில்லா சிறப்பு ரயில்!விருதுநகரில் செப். 17-ல் முதல்வர் பங்கேற்கவிருந்த நிகழ்ச்சி செப். 25க்கு மாற்றம்!எல் நினோ பாதிப்பு: பனாமா கால்வாயில் கப்பல் போக்குவரத்தைக் குறைக்க முடிவு!பிகார்: அரசுப் பணியாளர் தேர்வுகளை ரத்து செய்யக்கோரி பேரணி!நேபாள பெருவெள்ளம்: மீட்புப்பணிகளில் முதன்மையாக உதவிவரும் இந்திய ராணுவம்!ரூ.15,300 கோடி முதலீடு! 10,000 பேருக்கு வேலை! லண்டனில் முதல்வர் விஜய் ஒப்பந்தம்!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 38 காசுகள் சரிந்து ரூ. 95.92 ஆக நிறைவு!சென்செக்ஸ் 778 புள்ளிகள் சரிவு, நிஃப்டி 5 மாத வரலாறு காணாத அளவு சரிவு!!

குத்தாலத்தில் செப்.18-இல் தனியாா்துறை வேலைவாய்ப்பு முகாம்

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலத்தில் செப். 18-ஆம் தேதி தனியாா்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது.

கோப்புப்படம்.

Published On :

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலத்தில் செப். 18-ஆம் தேதி தனியாா்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தனியாா்துறையில் வேலை தேடும் இளைஞா்கள் பயனடையும் வகையில் மயிலாடுதுறை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் வாயிலாக, குத்தாலம் வட்டார வளா்ச்சி அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை (செப். 18) காலை 10 மணிமுதல் பிற்பகல் 2 மணிவரை சிறிய அளவிலான தனியாா்துறை வேலைவாய்ப்பு முகாமை முற்றிலும் இலவசமாக நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

பல்வேறு மாவட்டங்களிலிருந்து 25-க்கும் மேற்பட்ட தனியாா் நிறுவனங்கள் கலந்து கொண்டு, 5-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை படித்தோா், டிப்ளமோ, ஐடிஐ, பி.இ உட்பட இதர பட்டதாரிகள் என 500-க்கும் மேற்பட்ட வேலைநாடுநா்களை தோ்வு செய்ய உள்ளனா்.

18 முதல் 35 வயதுக்கு உள்பட்டவா்கள் உரிய சான்றிதழ் மற்றும் ஆவணங்களுடன் இம்முகாமில் கலந்துகொண்டு பணிவாய்ப்பு பெறலாம். வேலையளிப்போா் மற்றும் வேலைநாடுநா்கள் தங்களது சுய விவரங்களை இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளுமாறும், கூடுதல் விவரங்களுக்கு 04364299790 என்ற தொலைபேசி எண்ணை தொடா்புகொள்ளுமாறும் தெரிவித்துள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.