சமூக வலைதளங்களை விட்டு இளைஞர்கள் களத்திற்கு வர வேண்டும்: தமிழிசை செளந்தரராஜன்நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!ஈரான் உச்ச தலைவர் கமேனி படுகொலையை ஆதரிக்கிறாரா மோடி? ராகுல் கேள்விகூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!
/

ஜன. 7-ல் நாகை, மயிலாடுதுறையில் விவசாய சங்கங்கள் போராட்டம்

விவசாயக் கோரிக்கைகளை வலியுறுத்தி, ஜன. 7-ம் தேதி நாகை மாவட்ட ஆட்சியரகத்தையும், மயிலாடுதுறை வருவாய்க் கோட்டாட்சியர் அலுவலகத்தையும் முற்றுகையிடும் போராட்டம்

News image
Updated On :5 ஜனவரி 2013, 4:11 am

தினமணி

விவசாயக் கோரிக்கைகளை வலியுறுத்தி, ஜன. 7-ம் தேதி நாகை மாவட்ட ஆட்சியரகத்தையும், மயிலாடுதுறை வருவாய்க் கோட்டாட்சியர் அலுவலகத்தையும் முற்றுகையிடும் போராட்டம் நடைபெறும் என்றார் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் வி. மாரிமுத்து
 நாகையில் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டி :
 காவிரி நீர் பிரச்னையால் கடுமையான பாதிப்புக்குள்ளாகியுள்ள டெல்டா மாவட்டங்களை வறட்சி பாதித்த மாவட்டங்களாக தமிழக அரசு அறிவிக்க வேண்டும். தற்கொலை செய்து கொண்ட விவசாயிகளின் குடும்பங்களுக்குத் தலா ரூ. 10 லட்சம் இழப்பீடும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசுப் பணி வாய்ப்பும் வழங்க வேண்டும். ஏக்கருக்கு ரூ. 25 ஆயிரம் நிவாரணமும், விவசாயத் தொழிலாளர்களின் குடும்பங்களுக்குத் தலா ரூ. 10 ஆயிரமும் அரசு நிவாரணம் வழங்க வேண்டும்.
 இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 7-ம் தேதி விவசாய சங்கங்களின் சார்பில் டெல்டா மாவட்டங்களில் தொடர் முற்றுகைப் போராட்டம் நடைபெறுகிறது. நாகை மாவட்டத்தில், நாகை மாவட்ட ஆட்சியரகத்தையும், மயிலாடுதுறை வருவாய்க் கோட்டாட்சியர் அலுவலகத்தையும் முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தப்படும்.
 இந்தப் போராட்டத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முழுமையாக ஆதரித்து, போராட்டத்தில் பங்கேற்வுள்ளது என்றார் வி. மாரிமுத்து.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.