கடன் கொடுத்தவர் தூக்கிட்டு தற்கொலை
திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியில் கடனாக கொடுத்த பணம், நகையை நண்பர்கள் திருப்பி தராததால், கடன் கொடுத்தவர் ஞாயிற்றுக்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியில் கடனாக கொடுத்த பணம், நகையை நண்பர்கள் திருப்பி தராததால், கடன் கொடுத்தவர் ஞாயிற்றுக்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
மன்னார்குடி, மூர்க்க விநாயர் கோயில் தெருவைச் சேர்ந்த ராமசாமி மகன் வெங்கடேசன் (48). இவருக்கு மனைவி சுமதி, 2 மகன்கள் உள்ளனர்.
அடகுக்கடையில் கணக்கராக பணிபுரிந்து வந்த வெங்கடேசன், புதுக்கோட்டை மாவட்டம், கட்டுமாவடியைச் சேர்ந்த நண்பரான நைனாமுகமதுவுக்கு அவசரத் தேவைக்காக 7 பவுன் நகையை கொடுத்திருந்தாராம். இதேபோல், பந்தலடியில் காலணி கடை வைத்திருக்கும் முத்து என்பவருக்கு ரூ. 1.50 லட்சம் கடனாக கொடுத்திருந்தாராம்.
இந்நிலையில், தான் கொடுத்த பணத்தையும், நகையையும் திருப்பி தருமாறு இருவரிடமும் வெங்கடேசன் கேட்டு வந்தாராம். ஆனால் அவர்கள் தொடர்ந்து தாமதித்து வந்துள்ளனர்.
இதனால், சில நாள்களாக மனமுடைந்த நிலையில் இருந்து வந்த வெங்கடேசன், ஞாயிற்றுக்கிழமை லெக்கணம்பேட்டையில் இருக்கும் உறவினர் வீட்டுக்கு சென்றுள்ளார்.
அங்கு யாரும் இல்லாத நேரத்தில் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தகவலறிந்த மன்னார்குடி போலீஸார், சம்பவ இடத்துக்கு சென்று வெங்கடேசனின் சடலத்தை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு மன்னார்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து, விசாரித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

