வணிக சிலிண்டர் விநியோகம் நிறுத்தம்! இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு! ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை எரிவாயு தட்டுப்பாடு! பாகிஸ்தானில் 2 வாரங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை! இந்திய பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!
/

மணல்மேட்டில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி

மயிலாடுதுறை வட்டம், மணல்மேட்டில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :28 டிசம்பர் 2017, 3:13 am

DIN

மயிலாடுதுறை வட்டம், மணல்மேட்டில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.
மணல்மேடு அரசு கலைக்கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டம், எக்ஸ்னோரா சங்கம் ஆகியவை இணைந்து இந்நிகழ்ச்சியை நடத்தினர்.
நிகழ்சிக்கு, கல்லூரி முதல்வர் வேலு தலைமை வகித்தார். வில்லியநல்லூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கித் தலைவர் மகாகணபதி, பேராசிரியர் மணிகண்டன், எக்ஸ்னோரா சங்க நிர்வாகிகள் ராஜாராமன், சுகுமார்ஆகியோர்முன்னிலை வகித்தனர். கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சியை விவேகானந்தா கல்வி குழுமத்தின் தலைவர்  ரமேஷ் தொடங்கி வைத்தார். எக்ஸ்னோரா சங்க மாவட்டத் தலைவர் அசோக், சமூக ஆர்வலர் ரசீத்கான் ஆகியோர் நிகழ்ச்சியில் பங்கேற்று மரக்கன்றுகள் நடுதலின் அவசியம் குறித்துப் பேசினர். 
விவசாயி கணபதி திடக்கழிவு மேலாண்மைக் குறித்து விளக்கமளித்தார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கல்லூரி நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் முனைவர் கார்முகிலன் மற்றும் மாணவர்கள் செய்திருந்தனர். பேராசிரியர்கள், மாணவர்கள் கலந்துகொண்டனர். நாட்டு நலப்பணித் திட்ட மாவட்டச் செயலாளர் ராஜேஷ் நன்றி கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.