பணமதிப்பிழப்பு நடவடிக்கை: இந்து மக்கள் கட்சி வரவேற்பு
மத்திய அரசின் பண மதிப்பிழப்பு நடவடிக்கையை வரவேற்று இந்து மக்கள் கட்சியினர் இனிப்பு வழங்கி புதன்கிழமை கொண்டாடியது.


மத்திய அரசின் பண மதிப்பிழப்பு நடவடிக்கையை வரவேற்று இந்து மக்கள் கட்சியினர் இனிப்பு வழங்கி புதன்கிழமை கொண்டாடியது.
ஊழலுக்கு எதிராக கறுப்பு பண ஒழிப்பு நடவடிக்கையாக உயர் மதிப்புடைய ரூ. 500, 1000 நோட்டுகளை மதிப்பிழப்பு தடை செய்து (நவ.8-ஆம் தேதியுடன்) ஓராண்டு நிறைவு பெறுகிறது. ஊழல் அரசியல் வாதிகளும், தீவிரவாத இயக்கங்களும், மாவோயிஸ்டுகளும் இந்நாளை கருப்பு தினமாக கொண்டாடக் கூடிய சூழலில் இந்து மக்கள் கட்சி 2-ஆவது சுதந்திர தினமாக புதன்கிழமை கொண்டாடியது.
சீர்காழி கொள்ளிடமுக்கூட்டு பகுதியில் இந்து மக்கள் கட்சியின் மாநிலச் செயலர் ஜெ. சுவாமிநாதன் தலைமையில் அக்கட்சியினர் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர். மாவட்ட தலைவர் சோலை கோவிந்தராஜன், மாவட்ட அமைப்பாளர் பாலாஜி, கொள்ளிடம் ஒன்றிய தலைவர் சொக்கலிங்கம், நகர இளைஞர் அணி பொறுப்பாளர் சிவா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...