47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

இடிந்து விழுந்த பள்ளி கட்டடச் சுவர்

திருமருகல் அருகே பெரிய கண்ணமங்கலத்தில் ஆதிதிராவிடர் நல தொடக்கப்பள்ளி கட்டடத்தின் ஒரு பகுதி  புதன்கிழமை இடிந்து விழுந்தது.

News image
Updated On :16 நவம்பர் 2017, 1:14 am

DIN

திருமருகல் அருகே பெரிய கண்ணமங்கலத்தில் ஆதிதிராவிடர் நல தொடக்கப்பள்ளி கட்டடத்தின் ஒரு பகுதி  புதன்கிழமை இடிந்து விழுந்தது.
பெரிய கண்ணமங்கலம் ஆதிதிராவிடர் நல தொடக்கப்பள்ளியில்  பழுதடைந்த ஓட்டு கட்டடம் உள்ளது. 2006-07 ஆம் ஆண்டு புதிய கட்டடம் கட்டப்பட்டு அதில் மாணவர்கள் படித்து வருகின்றனர்.  ஓட்டு கட்டடம் மிகவும் பழுதடைந்திருந்ததால்,  அங்கு பயன்பாட்டுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், புதன்கிழமை காலை ஓட்டு கட்டடத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது.  தகவலறிந்த ஆதிதிராவிடர் நல அலுவலர் பாஸ்கர், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் செந்தமிழ்செல்வன், செபஸ்தியம்மாள் ஆகியோர் சம்பவ இடத்தைப் பார்வையிட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.