நாகை மாவட்டம், வேதாரண்யத்தில் தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலைப் பணியாளர்கள் சங்கத்தின் உள்கோட்ட 7-ஆவது மாநாடு திங்கள்கிழமை நடைபெற்றது.
மாநாட்டுக்கு சங்கத்தின் உள்கோட்டத் தலைவர் எஸ். சதாசிவம் தலைமை வகித்தார். இணைச் செயலாளர் பாலசுப்பிரமணியன், வேதரத்தினம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
அமைப்பின் மாவட்டச் செயலாளர் உதயகுமார், மாநில செயலாளர் வி. கணேசன், நிர்வாகி தவமணி, உள்கோட்டச் செயலாளர் கே. முருகானந்தம், பொருளாளர் முனுசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர். சாலை பணியாளர்களின் பணிநீக்கக் காலத்தை பணிக்காலமாக அறிவித்து ஊதியம் வழங்கவும், சாலைப் பணியாளர்கள் பதவி உயர்வுக்குத் தடையாக இருக்கும் அரசாணை எண் 87-ஐ ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் மாநாட்டில் நிறைவேற்றப்பட்டன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.