47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

ரயிலில் அடிபட்டு இரு இளைஞர்கள் சாவு

நாகப்பட்டினத்தில் ரயிலில் அடிபட்டு இரு இளைஞர்கள் இறந்தது புதன்கிழமை காலை தெரிய வந்தது.

News image
Updated On :16 நவம்பர் 2017, 1:10 am

DIN

நாகப்பட்டினத்தில் ரயிலில் அடிபட்டு இரு இளைஞர்கள் இறந்தது புதன்கிழமை காலை தெரிய வந்தது.
நாகை மேலக்கோட்டை வாசல் அருகே ரயில் தண்டவாளத்தில் இரு இளைஞர்கள் உடல் சிதறிய நிலையில் சடலமாக கிடப்பதாக நாகை ரயில்வே போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார் சடலங்களைக் கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர்.
போலீஸார் மேற்கொண்ட விசாரணையில்,  இறந்துபோன இருவரும் பூம்புகார், வானகிரி பகுதியைச் சேர்ந்த ராமலிங்கம் மகன் சங்கரநாராயணன் (20), பரசுராமன் மகன் தமிழரசன் (22) என்பதும்  இருவரும் நாகை பகுதியில் தங்கியிருந்து மீன்பிடித் தொழில் செய்து வந்ததும் தெரிய வந்தது.  இதையடுத்து அவர்களது  உறவினர்களிடம் தகவல் தெரிவிக்கப்பட்டது.
மேலும், அவர்கள் எந்த ரயிலில் அடிபட்டு இறந்தனர் என்பது குறித்து ரயில்வே போலீஸார்  விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.