திருவாலி தொடக்கப் பள்ளியில் எம்எல்ஏ ஆய்வு

திருவாலி ஊரட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் புதிதாக மழைநீர் சேகரிப்பு அமைப்பு மற்றும் சுற்றுச்சுவர் அமைக்கப்பட்டுள்ளதை எம்எல்ஏ பி.வி.பாரதி வியாழக்கிழமை ஆய்வு செய்தார்.
Updated on
1 min read

திருவாலி ஊரட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் புதிதாக மழைநீர் சேகரிப்பு அமைப்பு மற்றும் சுற்றுச்சுவர் அமைக்கப்பட்டுள்ளதை எம்எல்ஏ பி.வி.பாரதி வியாழக்கிழமை ஆய்வு செய்தார்.
 இப்பள்ளியில் சீர்காழி சட்டப்பேரவை  உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில்  ரூ.4.60 லட்சம் செலவில் சுற்றுச்சுவர் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், மழை நீர் சேகரிப்பு அமைப்பும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இதை எம்எல்ஏ பி.வி.பாரதி பார்வையிட்டார். அப்போது, தனியார் கட்டடங்கள் மற்றும் வீடுகளிலும் மழை நீர் சேகரிப்பு அமைப்பு ஏற்படுத்த வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
இந்த ஆய்வின்போது, அதிமுக ஒன்றிய இளைஞரணி செயலாளர் திருமாறன், மங்கைமடம் ஊராட்சி செயலாளர் நடராஜன், முன்னாள் பொருளாளர் அமிர்தலிங்கம் உள்ளிட்டோர்
உடனிருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com