சீர்காழி சட்டைநாதர் கோயிலில் உள்ள சிப்பந்திகள், ஊழியர்களுக்கு தீபாவளி அன்பளிப்பு மற்றும் இனிப்புகள் செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டன.
சீர்காழி ரோட்டரி சங்கம் சார்பாக நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு ரோட்டரி தலைவர் சுப்பிரமணியன் தலைமை வகித்தார். பொருளாளர் ராஜேந்திரன் முன்னிலை வகித்தார். இதில் சமூக ஆர்வலர் முருகவேல் பங்கேற்று திருக்கோயில் சிப்பந்திகளுக்கு தீபாவளி அன்பளிப்பாக ரொக்கப்பணம், மற்றும் இனிப்புகளை வழங்கினார். நிகழ்ச்சியில் கோயில் பணியாளர்கள், ரோட்டரி நிர்வாகிகள் பங்கேற்றனர். இதேபோல் அன்றைய தினம் கிருஷ்ணா சமூக நல அறக்கட்டளை சார்பில் ஆதரவற்ற முதியோர்களுக்கு வேட்டி, சேலைகள் அதன் நிறுவனத் தலைவர் ஜி.ரமேஷ் தலைமையில் வழங்கப்பட்டது. இதில் தலைவர் பி.துரைமுருகன் மற்றும் உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.