ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு! வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது! வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி
/

திருவெண்காடு கோயில் முக்குளத்தில் அஸ்திரதேவருக்கு தீர்த்தவாரி

சீர்காழி அடுத்த திருவெண்காடு கோயில் முக்குளத்தில் அஸ்திரதேவருக்கு தீர்த்தவாரி வழிபாடு வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :20 அக்டோபர் 2017, 2:13 am

DIN

சீர்காழி அடுத்த திருவெண்காடு கோயில் முக்குளத்தில் அஸ்திரதேவருக்கு தீர்த்தவாரி வழிபாடு வியாழக்கிழமை நடைபெற்றது.
இந்தக்  கோயிலில் உள்ள சூரியன், சந்திரன், அக்னி ஆகிய  தீர்த்தக் குளங்களில் அமாவாசை மற்றும் தமிழ் மாதப் பிறப்புகளில் அஸ்திரதேவருக்கு தீர்த்தவாரி நடைபெறுவது வழக்கம். அதன்படி ஐப்பதி மாத அமாவாசையையொட்டி அஸ்திரதேவருக்கு முக்குளங்களில் தீர்த்தவாரி நடந்தது. முன்னதாக அஸ்திரதேவர் சந்திர தீர்த்தக் குளத்திற்கு மேள,தாளங்கள் முழங்கிட எழுந்தருளினார்.
அங்கு மஞ்சள், திரவியப்பொடி, பால், தயிர், சந்தனம் முதலான பொருட்களால் அபிஷேகம் நடைபெற்று பின்னர் தீர்த்தவாரி நடைபெற்றது.  இதில் கோயில் நிர்வாக அதிகாரி பாஸ்கரன், தலைமை அர்ச்சகர் கந்தசாமி குருக்கள், வினோத்குருக்கள் மற்றும் பக்தர்கள் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.