மத்திய கிழக்கு போா்: இந்திய ஏற்றுமதி ரூ. 92,300 கோடி வரை சரியும் அபாயம்!கடலோர மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு!10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு நாளை தொடக்கம்!பெட்ரோல், டீசல் விலை இப்போதைக்கு உயராது; சிலிண்டா் முன்பதிவுக்கு கட்டுப்பாடு!ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்க தற்காலிகமாகவே அனுமதி: அமெரிக்கா மீண்டும் உறுதிபட்டயக் கணக்காளா் தோ்வு: மதுரை மாணவி முதலிடம்!
/

திருக்கோயில் சிப்பந்திகளுக்கு தீபாவளி அன்பளிப்பு

சீர்காழி சட்டைநாதர் கோயிலில் உள்ள சிப்பந்திகள், ஊழியர்களுக்கு  தீபாவளி அன்பளிப்பு மற்றும் இனிப்புகள் செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டன.

News image
Updated On :20 அக்டோபர் 2017, 2:14 am

DIN

சீர்காழி சட்டைநாதர் கோயிலில் உள்ள சிப்பந்திகள், ஊழியர்களுக்கு  தீபாவளி அன்பளிப்பு மற்றும் இனிப்புகள் செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டன.
 சீர்காழி ரோட்டரி சங்கம்  சார்பாக  நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு ரோட்டரி தலைவர் சுப்பிரமணியன் தலைமை வகித்தார். பொருளாளர் ராஜேந்திரன் முன்னிலை வகித்தார். இதில் சமூக ஆர்வலர் முருகவேல் பங்கேற்று திருக்கோயில் சிப்பந்திகளுக்கு தீபாவளி அன்பளிப்பாக ரொக்கப்பணம், மற்றும் இனிப்புகளை வழங்கினார். நிகழ்ச்சியில் கோயில் பணியாளர்கள், ரோட்டரி நிர்வாகிகள் பங்கேற்றனர்.  இதேபோல் அன்றைய தினம் கிருஷ்ணா சமூக நல அறக்கட்டளை சார்பில் ஆதரவற்ற முதியோர்களுக்கு வேட்டி, சேலைகள் அதன் நிறுவனத் தலைவர் ஜி.ரமேஷ் தலைமையில் வழங்கப்பட்டது. இதில் தலைவர் பி.துரைமுருகன் மற்றும் உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.