மதுரை விமான நிலையத்திற்கு சர்வதேச அந்தஸ்து! - மத்திய அமைச்சரவை ஒப்புதல்மருத்துவக் கல்லூரிகளில் விளையாட்டுப் பிரிவு ஒதுக்கீடு அதிகரிப்பு: தமிழக அரசுஎல்பிஜி சிலிண்டர் தட்டுப்பாடு: பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம்!வணிக சிலிண்டர் விநியோகம் நிறுத்தம்! இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு! ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை எரிவாயு தட்டுப்பாடு! பாகிஸ்தானில் 2 வாரங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை! இந்திய பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!
/

மின் இறைவை பாசனத் திட்ட பொறிமனைகளில் அமைச்சர் ஆய்வு

நாகை மாவட்டம், வேதாரண்யம் பகுதியில் மின் இறைவை பாசனத் திட்டப் பொறிமனைகளின் செயல்பாடுகளை தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஓ.எஸ். மணியன் வியாழக்கிழமை ஆய்வு செய்தார்.

News image
Updated On :20 அக்டோபர் 2017, 2:14 am

DIN

நாகை மாவட்டம், வேதாரண்யம் பகுதியில் மின் இறைவை பாசனத் திட்டப் பொறிமனைகளின் செயல்பாடுகளை தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஓ.எஸ். மணியன் வியாழக்கிழமை ஆய்வு செய்தார்.
வேதாரண்யம் பகுதிக்குள்பட்ட உம்பளச்சேரி, ஆய்மூர்-1,2, தகட்டூர், வாய்மேடு (கற்பகநாதர்குளம் (திருவாரூர் மாவட்டம்), மருதூர் பஞ்சநதிக்குளம் கிழக்கு, தென்னடார், வண்டுவாஞ்சேரி ஆகிய இடங்களில் செயல்படும் அரசின் மின் இறைவை பாசனத் திட்ட பொறிமனைகளின் செயல்பாடுகள் குறித்து அமைச்சர் ஓ.எஸ். மணியன் ஆய்வு செய்தார்.
ஆய்வுக்குப் பின்னர் அமைச்சர் ஓ.எஸ். மணியன் தெரிவித்தது:
வேதாரண்யம் பகுதி மானாவாரி நிலப் பகுதியில் செயல்படும் அரசின் மின் இறைவை பாசனத் திட்டத்தின் மூலம் விளைநிலங்களுக்கு தண்ணீர் பாசனம் செய்யப்பட்டு வருகிறது. இங்கு 25 முதல் 35 குதிரை திறன் கொண்ட மோட்டார்கள் மூலம் தண்ணீர் இறைக்கும் திறனுடையது. ஒவ்வொரு பொறிமனையும் குறைந்தபட்சம் 750 ஏக்கர் பரப்பில் பாசனம் செய்ய ஏதுவானதாக அமைந்துள்ளது. வளவனாறு மற்றும் அரிச்சந்திரா நதி உள்ளிட்ட ஆறுகள் ரூ. 1,650 கோடி மதிப்பில் ஆசிய வளர்ச்சி வங்கி நிதி உதவியுடன் இயக்கு அணைகள், பாலங்கள்அமைத்து சீரமைக்கப்பட்டு வருகிறது. இந்த ஆறுகள் மூலம் தண்ணீர் பெற்று பாசனம் பெறும் மின் இறைவை திட்டப் பொறிமனைகள் இதே திட்டத்தில் சேர்க்கப்பட்டு சீரமைக்கப்பட்டு வருகிறது.
அதன்படி வாய்மேடு, வண்டுவாஞ்சேரி உள்ளிட்ட பொறிமனைகளின் மோட்டார்கள் நீர் மூழ்கி மோட்டார்களாக மாற்றி அமைக்கப்பட்டு வருகிறது.
வேதாரண்யம் பகுதியில் உள்ள மற்ற பொறிமனைகளும் ஆசிய வளர்ச்சி வங்கி உதவியுடன் முள்ளியாற்றில் பராமரிப்புப் பணி மேற்கொள்ளும்போது பொறிமனைகள் மேம்பாடு செய்யப்படும் என்றார் அமைச்சர். ஆய்வின்போது, மாவட்ட ஆட்சியர் சீ. சுரேஷ்குமார், பொதுப்பணித்துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.