பிஃபா 2026! நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேற்றம்... பொது விடுமுறை அறிவித்த ஈக்வடார் அதிபர்!! முதல் டி20: இந்தியாவை முதல் முறையாக வீழ்த்தி வரலாறு படைத்த அயர்லாந்து! அதிமுக கொள்கை பரப்பு துணைச் செயலர்கள் நியமனம் தமிழக அரசின் தில்லி சிறப்பு பிரதிநிதியாக வெங்கட நாராயணா நியமனம்!ஆபரேஷன் சிந்தூரில் 6 வீரர் வீரமரணம்! ஓராண்டு கழித்து பெயர்களை வெளிட்ட மத்திய அரசு!ஜூலை இறுதியில் தவெக அரசின் முதல் பட்ஜெட் தாக்கல்? திருச்சி கிழக்கில் போட்டியா? மு.க. ஸ்டாலின் பதில்! சென்னை உள்பட 6 மாவட்டங்களில் நாளை கனமழை!
/

வேதாரண்யத்தில் விவசாய பாதுகாப்பு சங்கக் கூட்டம்

வேதாரண்யத்தில், திருவாரூர் மற்றும் நாகை மாவட்ட குடிக்காணி மற்றும் குத்தகை சாகுபடிதாரர்கள் விவசாயப் பாதுகாப்பு சங்கத்தின் செயற்குழுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது.

Updated On :5 ஏப்ரல் 2018, 9:51 am IST

வேதாரண்யத்தில், திருவாரூர் மற்றும் நாகை மாவட்ட குடிக்காணி மற்றும் குத்தகை சாகுபடிதாரர்கள் விவசாயப் பாதுகாப்பு சங்கத்தின் செயற்குழுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது.
அமைப்பின் தலைவர் சா. பாஸ்கரன் தலைமை வகித்தார். சங்கச் செயலாளர் மு. கலிதீர்த்தான், நிர்வாகிகள் தமிழழகன், எம்.ஆர். சுப்பிரமணியன், அமைப்புச் செயலாளர் சுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் சங்கத்தின் கௌரவத் தலைவர் கவிஞர் புயல் குமார், பொருளாளர் அருள்ஜோதி, நிர்வாகிகள் சேகர், பாலசுப்பிரமணியன், கணேசன், மாரிமுத்து, கருணாநிதி, சீனிவாசன் உள்ளிட்டோர் பங்கேற்று பேசினர்.
தீர்மானங்கள், முடிவுகள்: நாகை மாவட்ட பகுதியில் மீத்தேன் எடுக்கும் திட்டத்துக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்துவது, குடிக்காணி குத்தகை நிலங்கள் விவகாரத்தில் நீதிமன்ற உத்தரவுக்கு பொருந்தாத வகையில் செயல்படும் அறநிலையத்துறையின் நடவடிக்கைக்கு நீதிமன்ற தடை கோருவது, 2016-17 -ஆம் ஆண்டுக்கான பயிர்க் காப்பீட்டுத் தொகையை வழங்க வலியுறுத்தி ஏப். 15 -இல் வேதாரண்யம் வட்டாட்சியர் அலுவலகம் எதிரே ஆர்ப்பாட்டம் நடத்துவது உள்ளிட்ட முடிவுகள் எடுக்கப்பட்டன. இதேபோல், உச்ச நீதிமன்ற உத்தரவை ஏற்று, மத்திய அரசு உடனடியாக காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.