தங்கம் விலை சவரனுக்கு ரூ. 400 குறைவுஉழைப்புக்கான பலன் மே 4-ல் கிடைக்கும்: முதல்வர் ஸ்டாலின்அரபிக் கடலில் உருவாகிறது புதிய புயல் சின்னம்!கருத்துக் கணிப்புகள் ஒரு புதிர்: வைகோசித்திரைத் திருவிழா: பச்சை பட்டு உடுத்தி வைகையில் இறங்கினார் கள்ளழகர்!
/

தூய்மை இந்தியா திட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி

சீர்காழி அரசு மருத்துவமனையில் தூய்மை இந்தியா திட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி அண்மையில் நடைபெற்றது.

Updated On :9 ஏப்ரல் 2018, 3:22 am

சீர்காழி அரசு மருத்துவமனையில் தூய்மை இந்தியா திட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி அண்மையில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு தலைமை மருத்துவர் தேவலதா தலைமை வகித்தார். மருத்துவர்கள் மருதவாணன், ரோட்டரி தலைவர் சுப்பிரமணியன், முன்னாள் தலைவர் சிவகுரு ஆகியோர் முன்னிலை வகித்தனர். மருந்தாளுநர் முரளி வரவேற்றார்.
மருத்துவமனை வளாகத்தை தூய்மையாக வைத்துக் கொள்வது பற்றி தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியம் வட்டத்தலைவர் மணிவண்ணன், செயலாளர் வெங்கடேசன், பொருளாளர் கருணாகரன், நிர்வாகி செந்தில்குமார் ஆகியோர் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
இதில் மருத்துவமனை ஊழியர்கள், ரோட்டரி நிர்வாகிகள், தமிழ்நாடு அரசு அலுவலக ஒன்றியப் பொறுப்பாளர்கள் கலந்துகொண்டனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.