சீர்காழி அருகேயுள்ள ஆனந்தக்கூத்தன் கிராமத்திலுள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிக் கட்டடம் பழுதடைந்த நிலையில் இருப்பதால், மாணவர்கள் மரத்தடியில் கல்வி பயிலும் அவலம் நிலவுகிறது.
நாகை மாவட்டம், ஆனந்தக்கூத்தன் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 88 மாணவ, மாணவியர் கல்வி பயின்று வருகின்றனர். இப்பள்ளியில் தலைமையாசிரியர் உள்பட 6 ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். கடந்த 2006-ஆம் ஆண்டு கட்டப்பட்ட மூன்று வகுப்பறைகள் கொண்ட புதிய கட்டடத்தில், கடந்த ஆண்டு பெய்த மழையின்போது மேற்கூரை வழியாக மழைநீர் கசிந்தது. இதனால், வகுப்பறையில் மாணவர்கள் கல்வி கற்க முடியாத நிலை ஏற்பட்டது.
இதைத்தொடர்ந்து, ரூ.65 ஆயிரம் செலவில் கட்டடம் சீரமைக்கப்பட்டது. எனினும், இதனால் எந்த பலனும் இல்லாமல் போனதால், ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் மாணவர்களைக் கட்டடத்துக்குள் அனுமதிக்கக்கூடாது என்று உத்தரவிட்டனர். இதையடுத்து, பள்ளிக் கட்டடம் பூட்டப்பட்டு, மாணவர்கள் மரத்தடியில் அமர்ந்து படித்து வருகின்றனர். இந்த நிலையில், மரக்கிளைகள் மாணவர்கள் மீது முறிந்துவிடுமோ என்ற அச்சத்தில், நாள்தோறும் குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்புவதாகப் பெற்றோர் மனம் குமுறுகின்றனர்.
அத்துடன், திடீரென்று மழை வந்தால் மாணவர்கள் அனைவரையும் பள்ளி வளாகத்திலுள்ள சிறிய அங்கன்வாடி கட்டடத்தில் அடைப்பதாக அப்பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
இந்த அவலநிலையைப் போக்க அரசு துரிதமாகச் செயல்பட்டு, கோடை விடுமுறையில் புதிய தரமான கட்டடத்தைக் கட்ட வேண்டுமென்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

காணாமல்போன 194 பேரை மீட்டு குடும்பத்தினருடன் சோ்த்துவைப்பு தில்லி காவல்துறை நடவடிக்கை

தெலங்கானாவில் மருந்து ஆலையில் வெடிவிபத்து: ஒருவர் பலி, 8 பேர் காயம்

ராயல் என்ஃபீல்டு விற்பனை 31 சதவீதம் அதிகரிப்பு!

மமதா தோல்வி அடையப்போகும் விரக்தியில் உள்ளார்: சுவேந்து அதிகாரி
வீடியோக்கள்

#ipl2026 | "உலகக் கோப்பை ஜெயிக்க உங்களுக்கு கிளாசென் வேண்டும்" |
தினமணி செய்திச் சேவை

Dinamani வார ராசிபலன்! | May 3 முதல் 9 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு

