மயிலாடுதுறை அர்த்தநாரீஸ்வரர் சுவாமி கோயில் மற்றும் ருத்ராபதி சுவாமி கோயிலில் அமுதுப் படையல் வழிபாடு நடைபெற்றது.
மயிலாடுதுறை கூரைநாடு பகுதி தணியூர் வாணியத் தெருவில் அருள்பாலிக்கும் அர்த்தநாரீஸ்வரர் சுவாமி கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் சிறுதொண்ட நாயனார் அமுதுப் படையல் ஐதீக விழா நடைபெற்றுவருகிறது.
அதன்படி 63-ஆம் ஆண்டு அமுதுப் படையல் ஐதீக விழாவையொட்டி திங்கள்கிழமை பால்குடம் மற்றும் காவடி ஊர்வலமாக எடுத்துவரப்பட்டு, சுவாமிக்கு அபிஷேக-ஆராதனைகள் நடைபெற்றன. பின்னர் பிற்பகலில் அன்னதானமும், இரவில் சீராளன் பல்லக்கில் ஊர்வலம் வரும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. தொடர்ந்து, செவ்வாய்க்கிழமை அதிகாலை சீராளன் அருட்பிரசாதம் வழங்கப்பட்டது. இவ்விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள் ஆர். ஆறுமுகம், எஸ். சுவாமிநாதன், எஸ். ரவிச்சந்திரன், வி. முருகன், எஸ். ராஜா உள்ளிட்டோர் செய்திருந்தனர்.
இதேபோல் 5-ஆம் புதுத்தெருவில் உள்ள அருள்மிகு ருத்ராபதி சுவாமி கோயிலில் சிறுத்தொண்ட நாயனார் அமுதுப் படையல் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, அருள்மிகு அபயாம்பிகை உடனுறை மயூரநாதர் திருக்கோயிலிலிருந்து பால்குடங்கள், காவடிகள் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு, ருத்ராபதி சுவாமிக்கு சிறப்பு அபிஷேக- ஆராதனைகள் செய்யப்பட்டன. தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.








