நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகே சகோதரர் வீடு உள்ளிட்ட இரு இடங்களில் நகை, பணம், நெல் திருடியதாக ஒருவரை போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.
பிராந்தியங்கரை ஊராட்சி, அண்டகத்துறை, கொள்ளிமேட்டுத்திடல் பகுதியைச் சேர்ந்த காத்தான் மகன்கள் ரமேஷ் (35), சங்கர் (32). இருவரும் தனித்தனியாக வசித்து வருகின்றனர். இந்த நிலையில், ரமேஷ், அவரது மனைவி பொன்னம்மாள் உள்ளிட்டோர் கோயில் திருவிழாவுக்குச் சென்றுவிட்டனர். இதனால், பூட்டியிருந்த அவர்களது வீட்டின் பின்பக்கமாகச் சென்ற சங்கர், ஒரு கிராம் மோதிரம்-2, ரூ.19,500 ரொக்கம் ஆகியவற்றை திருடிச் சென்றாராம். இதுகுறித்து கரியாப்பட்டினம் காவல் நிலையத்தில் பொன்னம்மாள் புகார் அளித்தார். விசாரணையில், மகாராஜபுரம் மேற்குக் கிராமத்தில் உள்ள உமாபாலன் வீட்டில், சங்கர் ஒரு மூட்டை நெல் திருடியதும் தெரியவந்தது.
இந்த இரு சம்பவங்கள் குறித்தும் போலீஸார் வழக்குப் பதிந்து, சங்கரை செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சீனா - பாகிஸ்தான் அச்சுறுத்தல்: கடற்படைத் திறன்கள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன -தலைமைத் தளபதி திரிபாதி

தொழில்நுட்பக் கோளாறு: பல மையங்களில் தாமதமான ‘க்யூட்’ தோ்வு

ஸ்ரீ கோவிந்தராஜ சுவாமிக்கு விலைமதிப்பற்ற ஆபரணங்கள்

மிகப் பெரிய தாக்குதலுக்குத் தயாராகும் ரஷியா
விடியோக்கள்

ஆர்சிபிக்கு அநீதி?: சொந்த மண்ணில் கோப்பை வெல்லுமா குஜராத்?

”வட மாநிலத்தவர்களுக்கும் மகளிர் உரிமைத்தொகை? Full Report விரைவில்!”: அமைச்சர் மரிய வில்சன்!

UN Kannan Interview | F3 விவகாரம்.. எதிர்கொள்ளுமா இந்தியா?| Economic crisis | PM Modi | Rahul |India


