நடிகர் அஜித் குமாரின் தாயார் உடலுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! திருவாரூர்: சேங்காலிபுரம் பகுதியில் வீடு புகுந்து மேஸ்திரி படுகொலை - 3 பேர் கைதுபெங்களூரில் ஐபிஎல் கொண்டாட்டங்களுக்கு தடைஆளுநர் மாளிகையில் காவி உடையில் திருவள்ளுவர் படம்: உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!ஆட்சி அமைக்க டி.கே. சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்
/

வைத்தீஸ்வரன்கோயிலில் பாமகவினர் சிறப்பு வழிபாடு

வன்னியர் சங்கத் தலைவர் ஜெ. குரு நலம் பெற வேண்டி, சீர்காழியை அடுத்த வைத்தீஸ்வரன்கோயிலில் பாமக சார்பில் செவ்வாய்க்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

Updated On :18 ஏப்ரல் 2018, 7:53 am IST

வன்னியர் சங்கத் தலைவர் ஜெ. குரு நலம் பெற வேண்டி, சீர்காழியை அடுத்த வைத்தீஸ்வரன்கோயிலில் பாமக சார்பில் செவ்வாய்க்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
வன்னியர் சங்கத் தலைவர் ஜெ. குரு உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், அவர் உடல் நலம் பெறவேண்டி பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் நாகை வடக்கு மாவட்டச் செயலாளர் லண்டன். அன்பழகன் தலைமையில், வைத்தீஸ்வரன்கோயிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
தையல்நாயகிஅம்மன் சமேத வைத்தியநாதசுவாமி, செல்வமுத்துக்குமாரசுவாமி, அங்காரகன், தன்வந்திரி ஆகிய சுவாமிகளுக்கு சிறப்பு வழிபாடுகள் செய்யப்பட்டு ஜெ. குரு பெயரில் சங்கல்பம் செய்து, பாமகவினர் அர்ச்சனை செய்து வழிப்பட்டனர். பின்னர், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினர்.
இதில் நகரத் தலைவர் தில்லைகன்ராஜ், செயலாளர்கள் சுசீந்திரன், பி.எஸ். குமார், மாவட்டத் துணைத் தலைவர்கள்  ஜெ. இளங்கோவன், நேதாஜி, வன்னியர் சங்க மாவட்டத் தலைவர் சீனுவாசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.