குத்தாலம் அருகே பூட்டிய நிலையில் துணை ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளதால் பொதுமக்கள் அவசர சிகிச்சைக்கூட பெறமுடியாமல் தவித்து வருகின்றனர்.
நாகை மாவட்டம், குத்தாலம் அருகேயுள்ள கடலங்குடியில் துணை ஆரம்ப சுகாதார நிலையம் இயங்கி வருகிறது. கடந்த 3 ஆண்டுகளாக இந்த துணை சுகாதார நிலையத்துக்கு மருத்துவர்கள், நியமிக்கப்படாததால் மருத்துவர்களை பணி அமர்த்த வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இதையடுத்து, வாரத்தில் 3 நாள்கள் மருத்துவர் வருவார் என்று சம்பந்தப்பட்ட அலுவலர்கள் தெரிவித்தும், இரு ஆண்டுகளாகியும் தற்போதுவரை மருத்துவர்கள் யாரும் பணியில் அமர்த்தவில்லை. இந்நிலையில், இங்கு பணியாற்றிய செவிலியரும் தற்போது வருவதில்லை.
கடந்த 3 மாதங்களுக்கு மேலாக துணை சுகாதார நிலையம் பூட்டிய நிலையிலேயே இருந்து வருகிறது. இதனால், கடலங்குடி, திருவேள்விக்குடி, வாணாதிராஜபுரம் ஆகிய கிராமங்களை சேர்ந்த 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் சிகிச்சைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு சென்று வருகின்றனர். மேலும், கர்ப்பிணிகளுக்கு தடுப்பூசி போடவும், பிரசவித்த தாய்மார்கள் தங்கள் குழந்தைகளுக்கு தடுப்பூசி போடவும், மகப்பேறு உதவித்தொகை பெறுவதற்கும் குத்தாலத்தில் உள்ள அரசு மருத்துவமனைக்கு செல்ல வேண்டிய சூழ்நிலை உள்ளது. இதனால், ஏழை எளிய மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருவதால், கடலங்குடி துணை ஆரம்ப சுகாதார நிலையத்தில் முழுநேர மருத்துவர்களை நியமித்து சிறந்த முறையில் இயங்க சம்பந்தப்பட்ட துறையினர் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








