பைக்கில் மது கடத்திய இருவர் கைது
குத்தாலம் அருகே மோட்டார் சைக்கிளில் மது கடத்திய இருவரை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.
குத்தாலம் அருகே மோட்டார் சைக்கிளில் மது கடத்திய இருவரை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.
பெரம்பூர் காவல் உதவி ஆய்வாளர் தமிழ்செல்வி மற்றும் போலீஸார் சேத்தூர் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, அந்த வழியாக ஒரு மோட்டார் சைக்கிளில் வந்த இருவரை நிறுத்தி விசாரணை செய்தபோது, அவர்களில் ஒருவர் தியாகராஜநல்லூர் மேலத் தெருவைச் சேர்ந்த வெள்ளைச்சாமி மகன் கார்த்திக் (28) என்பதும், மற்றொருவர் நரிக்குடி கிராமம் மேலத் தெருவைச் சேர்ந்த செல்வராஜ் மகன் குகன் (24) என்பதும் தெரியவந்தது.
மேலும், அவர்கள் மோட்டார் சைக்கிளில் புதுவை மாநில மதுபுட்டிகளை கடத்தி வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் கைது செய்த போலீஸார் அவர்களிடமிருந்து மதுபுட்டிகளை பறிமுதல் செய்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

