நாசிக்கில் மீண்டும் நிலநடுக்கம் பொதுத் தேர்வுகளைச் சீரமைக்க அரசு நடவடிக்கை! - குடியரசுத் தலைவர் முர்மு உரை!சென்னையின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை காலையில் குறைந்த தங்கம் விலை, மாலையில் உயர்ந்தது!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 3 காசுகள் உயர்ந்து ரூ. 95.42 ஆக நிறைவு!கோவை மாணவர் குடும்பத்திற்கு உதயநிதி ஆறுதல் சுதந்திர நாள்: ஆளுநரின் தேநீர் விருந்து இல்லை! - மக்கள் மாளிகை
/

ஓஎன்ஜிசி குழாயில் உடைப்பு: வயல்வெளியில் எண்ணெய் கசிவு

நாகை மாவட்டம், குத்தாலம் அருகே பதிக்கப்பட்டுள்ள ஓஎன்ஜிசி நிறுவனத்துக்குச் சொந்தமான எரிவாயு கொண்டு செல்லும்

Updated On :30 ஜனவரி 2024, 9:57 pm IST

நாகை மாவட்டம், குத்தாலம் அருகே பதிக்கப்பட்டுள்ள ஓஎன்ஜிசி நிறுவனத்துக்குச் சொந்தமான எரிவாயு கொண்டு செல்லும் குழாயில் உடைப்பு ஏற்பட்டதால், வயல்வெளியில் செவ்வாய்க்கிழமை எண்ணெய் கசிவு ஏற்பட்டது.
குத்தாலத்தை அடுத்த சேத்திரபாலபுரத்தில் ஓஎன்ஜிசி நிறுவனத்துக்குச் சொந்தமான எண்ணெய் மற்றும் எரிவாயு சேமிப்புக் கிடங்கு  உள்ளது. கதிராமங்கலம் எண்ணெய் கிணற்றிலிருந்து எடுக்கப்படும் எண்ணெய் மற்றும் எரிவாயு இந்த குழாய் வழியாக சேத்திரபாலபுரத்துக்கு கொண்டு செல்லப்படுகிறது.
இந்நிலையில் செவ்வாய்க்கிழமை அஞ்சலாற்றங்கரை பகுதியைச் சேர்ந்த கோவிந்த் என்பவரது விவசாய நிலத்தின் வழியாக செல்லும் குழாயில், திடீரென உடைப்பு ஏற்பட்டு  எண்ணெய் மற்றும் எரிவாயு நிலத்தின் மேல்புறத்தில் வெளியேறியது. தகவலறிந்து வந்த ஓஎன்ஜிசி நிறுவன அதிகாரிகள், எண்ணெய் கசிவைத் தடுத்து நிறுத்தினர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.