சீர்காழியில் புதன்கிழமை கூரை வீடு தீப்பிடித்து எரிந்து சேதமடைந்தது.
சீர்காழி குமரக்கோவில் மேலதெருவை சேர்ந்தவர் கோ. மனோகரன் (57) எலக்ட்ரீசியன்.இவரது கூரை வீடு மின்கசிவு காரணமாக தீப்பிடித்து எரிந்தது. தகவலறிந்து அங்கு விரைந்து வந்த சீர்காழி தீயணைப்புத் துறையினர் தீ மேலும் பரவாமல் தடுத்து அணைத்தனர். இதில், வீட்டு உபயோகப் பொருள்கள் சேதமடைந்தது. இதுகுறித்து சீர்காழி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.