ஜார்க்கண்ட் போராட்டம்: இந்து அமைப்பைச் சேர்ந்த 110 பேர் கைது!20,000 இளைஞர்களுக்கு செயற்கை நுண்ணறிவு திறன் பயிற்சி அளிக்க சாம்சங் திட்டம்!முதலாவது சுதந்திர நாளை கொண்டாடிய பலூசிஸ்தான்!கிராமப்புற அரசுப் பள்ளிகளின் நிலை என்ன? பிரசாரத்தை தொடங்கியது கரப்பான்பூச்சி ஜனதா கட்சிஈரோடு: பவானி அருகே பள்ளியில் மின்சாரம் தாக்கி மாணவன் உயிரிழப்புஆடி அமாவாசை: சதுரகிரி செல்ல பக்தர்களுக்கு அனுமதிகுரங்குடன் நடிகர் விக்ரம் வீடியோ: வனத் துறை விசாரணைதவெகவில் இணைந்தார் சிங்கை ராமச்சந்திரன்
/

நாகையில் ஜாக்டோ- ஜியோ ஆர்ப்பாட்டம்

ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களை தமிழக முதல்வர் விமர்சித்துப் பேசியதைக் கண்டித்து ஜாக்டோ - ஜியோ அமைப்பு சார்பில் நாகை அவுரித் திடலில் புதன்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

Updated On :30 ஜனவரி 2024, 10:08 pm IST

ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களை தமிழக முதல்வர் விமர்சித்துப் பேசியதைக் கண்டித்து ஜாக்டோ - ஜியோ அமைப்பு சார்பில் நாகை அவுரித் திடலில் புதன்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அண்மையில் சேலத்தில் நடைபெற்ற அதிமுக செயல்வீரர்கள் கூட்டத்தில் பேசிய தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி, ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களை விமர்ச்சித்துப் பேசியதைக் கண்டிக்கும் வகையில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஜாக்டோ - ஜியோ மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் ஏ.டி. அன்பழகன், பா. ரவி,  சி. சரவணன் ஆகியோர் தலைமை வகித்தனர்.  
ஜாக்டோ - ஜியோ உயர்மட்டக்குழு உறுப்பினர் ப. அந்துவன் சேரல், தமிழக ஆசிரியர் கூட்டணி நிர்வாகி பார்த்தசாரதி, ஆசிரியர் மன்ற மாவட்டச் செயலாளர் ஜெக. மணிவாசகம், சத்துணவு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் வி.தேன்மொழி, வருவாய்த்துறை அலுவலர் சங்க மாநிலச் செயலாளர் எல். பிரேம்சந்திரன், ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்க மாநிலச் செயலாளர் அ. செளந்தரபாண்டியன் ஆகியோர் பேசினர். அரசு ஊழியர் சங்க மாவட்டப் பொருளாளர் பா.ராணி நன்றி கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.