பாரதிராஜாவுக்கு மணிமண்டபம்! தமிழக அரசுக்கு திரைப்பட இயக்குநர்கள் சங்கம் நன்றி!அரசியல் சந்நியாசம் மேற்கொள்ள மாட்டேன்: மமதா பானர்ஜி உறுதி!இளைஞர்களின் உலகளாவிய வேலைவாய்ப்புத் திறனை மேம்படுத்த ஜெர்மன், ஜப்பானிய மொழிப் பயிற்சி: உயர்கல்வித் துறை விவசாய மாணவர்களுக்கு கல்விக் கட்டண விலக்கு! உயர்கல்வித் துறை அறிவிப்புபின்வாசல் வழியாக இட ஒதுக்கீட்டை ஒழிக்கத் திட்டமிடும் மோடி அரசு: கார்கே குற்றச்சாட்டுபள்ளிச் சீருடையுடன் இனி ஸ்போர்ட்ஸ் ஜெர்ஸி வழங்கப்படும்: அமைச்சர் ராஜ்மோகன்அமைச்சர் மரிய வில்சன் மீது லஞ்ச ஒழிப்புத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்! அன்பில் மகேஸ்எல்லைக் காவலர்களுக்கு உதவித் தொகை உயர்வு: அமைச்சர் ராஜ்மோகன்பள்ளி மாணவர்களுக்கு கண், காது, பல் பரிசோதனை செய்யப்படும்: பள்ளிக் கல்வித் துறை

திரௌபதி அம்மன் கோயில் கும்பாபிஷேகம்

சீர்காழி அருகேயுள்ள புளியந்துறை திரௌபதி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் 51 ஆண்டுகளுக்குப் பிறகு  புதன்கிழமை நடைபெற்றது.

Published On :30 ஜனவரி 2024, 10:08 pm IST

சீர்காழி அருகேயுள்ள புளியந்துறை திரௌபதி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் 51 ஆண்டுகளுக்குப் பிறகு  புதன்கிழமை நடைபெற்றது.
புளியந்துரை கிராமத்தில் 400 ஆண்டுகளுக்குமேல் பழைமையான திரௌபதி அம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் 51 ஆண்டுகளுக்கு பிறகு குடமுழுக்கு செய்ய ஊர் பொதுமக்கள் முடிவெடுத்து, திருப்பணிகளை முடித்து புதன்கிழமை கும்பாபிஷேகம் நடத்த தீர்மானிக்கப்பட்டது.
 அதன்படி நடைபெற்ற விழாவையொட்டி, விக்னேஸ்வர பூஜை, வாஸ்துசாந்தி பூஜைகளுடன் முதல் கால யாக பூஜை தொடங்கியது. தொடர்ந்து, இரண்டாம் காலயாக பூஜை, கணபதி பூஜை, சூரிய பூஜை நடைபெற்று விழா யாகசாலையிலிருந்து கடம் புறப்பட்டு விநாயகர், திரௌபதி அம்மன், கங்கையம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது. விழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.