மலையாளச் சொந்தங்களுக்கு இதயங்கனிந்த ஓணம் வாழ்த்துகள்! முதல்வர் விஜய்‘மகாபலியின் மண்ணில் சமத்துவம் மலரட்டும்: மனமார்ந்த ஓணம் வாழ்த்துக்கள்!’ - மு.க.ஸ்டாலின்குழந்தைகள், முதியவா்களுக்கு எச்1என்1 வைரஸ் பரவும் அபாயம் அதிகம்: மருத்துவா்கள் எச்சரிக்கைமேற்குத் தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்றும், நாளையும் மிதமான மழைக்கு வாய்ப்புபி.எட். சோ்க்கை: செப். 4 இறுதிநாளை சாா்-பதிவாளா் அலுவலகங்களில் கூடுதல் முன்பதிவு டோக்கன்: பதிவுத் துறை

தூய்மைப் பள்ளிக்கான விருது பெற்ற தலைமையாசிரியர், மாணவர்களுக்குப் பாராட்டு

நாகை மாவட்ட ஆட்சியரிடமிருந்து தூய்மைப் பள்ளிக்கான விருது பெற்ற மயிலாடுதுறையை அடுத்துள்ள மூவலூர் அரசு

Published On :30 ஜனவரி 2024, 10:08 pm IST

நாகை மாவட்ட ஆட்சியரிடமிருந்து தூய்மைப் பள்ளிக்கான விருது பெற்ற மயிலாடுதுறையை அடுத்துள்ள மூவலூர் அரசு உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் மற்றும் மாணவர்களுக்கு பாரதிய ஜனதாகட்சி தூய்மைப் பாரத திட்டத்தின் பொறுப்பாளர்கள் புதன்கிழமை பாராட்டுத் தெரிவித்தனர்.
நாகை மாவட்ட நிர்வாகம் சார்பில் ஆக. 15 -ஆம் தேதி நடைபெற்ற சுதந்திர தின விழாவில், மத்திய அரசின்  தூய்மைப் பாரத திட்டத்தை சிறப்பாகச்  செயல்படுத்தியமைக்காக மூவலூர் மூதாட்டி ராமாமிர்தம் அம்மையார்அரசு உயர்நிலைப்பள்ளிக்கு தூய்மைப் பள்ளி விருது வழங்கப்பட்டது.
இந்நிலையில், மத்திய அரசின் தூய்மைப் பாரத திட்டத்தை பள்ளியில் சிறப்பாகச் செயல்படுத்தி, விருது பெற்ற பள்ளியின் தலைமையாசிரியர் இ. முருகன் மற்றும் மாணவ, மாணவியருக்கு, பாரதிய ஜனதா கட்சியினர் மற்றும்  தூய்மைப் பாரத  திட்டப் பொறுப்பாளர்கள் பள்ளிக்குச் சென்று பாராட்டுத் தெரிவித்தனர்.
தூய்மைப் பாரத திட்டத்தின் நாகை மாவட்ட கன்வீனரும், பாஜக மயிலாடுதுறை நகர தலைவருமான மோடி. கண்ணன் தலைமையில் நடைபெற்ற பாராட்டு நிகழ்ச்சியில், மயிலாடுதுறை நகராட்சி மருத்துவ அலுவலர் டாக்டர் பிரதீப் கிருஷ்ணகுமார், பாஜக மாநிலச் செயற்குழு உறுப்பினர் கோவி. சேதுராமன், மாவட்டப் பொதுச் செயலர் நாஞ்சில் பாலு, நகர பொதுச் செயலர் மயில் (எ) ரவி, சுகாதார ஆய்வாளர் (ஓய்வு) அறிவழகன் ஆகியோர் பங்கேற்று, பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்குப் பாராட்டுத் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.