கோயில் அறங்காவலர் தேர்வுக் குழுவில் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி!திருமணம் குறித்து மனம் திறந்தார் சரா டெண்டுல்கர்! வருங்கால கணவர் யார்?பொறியியல் கலந்தாய்வு! துணைத்தோ்வு எழுதியோர், இதுவரை விண்ணப்பிக்காதோருக்கு மீண்டும் வாய்ப்பு!திருமணம் குறித்து மனம் திறந்தார் சரா டெண்டுல்கர்! வருங்கால கணவர் யார்?இலவச ரேஷன் அரிசியை நாம் ஒருமுறையாவது சமைத்து சாப்பிட்டிருப்போமா? ஆதவ் அர்ஜூனா கேள்விவாழைக்கு முட்டுக்கொடுத்தல் திட்டம்போல... எம்ஆர்கே பேச்சால் அவையில் சிரிப்பலை!தங்கம் விலை குறைவு: வெள்ளி விலை? -ஆக. 10 நிலவரம்! நெல், கரும்பு விவசாயிகளுக்கான ஊக்கத்தொகை உயர்வு! முதல்வர் விஜய் அறிவிப்பு! நாங்கள் 5 ஆண்டுகள் டென்ஷனாக இருந்தோம்; நீங்கள் எல்லாம் ரிலாக்ஸாக இருக்கிறீர்கள்! எம்ஆர்கே பன்னீர்செல்வம்தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம்: பேரவையில் தீர்மானம் நிறைவேற்றம்!
/

சீர்காழி தாடாளன் பெருமாள் கோயிலில் பரமபத வாசல் திறப்பு

சீர்காழி தாடாளன் பெருமாள் கோயிலில் வைகுண்ட ஏகாதசியையொட்டி, பரமபத வாசல் திறப்பு  செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

Updated On :30 ஜனவரி 2024, 11:25 pm IST

சீர்காழி தாடாளன் பெருமாள் கோயிலில் வைகுண்ட ஏகாதசியையொட்டி, பரமபத வாசல் திறப்பு  செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இக்கோயிலில் வைகுண்ட ஏகாதசி விழா டிச. 8-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. பகல் பத்து உத்ஸவம் திங்கள்கிழமை நிறைவு பெற்றதையடுத்து, பரமபத வாசல் திறப்பு நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை அதிகாலை நடைபெற்றது. முன்னதாக ஸ்ரீதேவி, பூதேவி சமேத உத்ஸவர்  திருவிக்கிரமநாராயண பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனம், சாற்றுமுறை, தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து, பெருமாள் முத்தங்கி அலங்காரத்தில் பரமபத வாசலுக்கு எழுந்தருளினார். அப்போது, கூடியிருந்த பக்தர்கள் கோவிந்தா, கோவிந்தா என பக்தி கோஷமிட்டு பெருமாளை தரிசனம் செய்தனர்.
இதேபோல், சீர்காழி அருகே உள்ள எருக்கூர் லெட்சுமி நாராயண பெருமாள், அண்ணன்கோயில் கிராமத்தில் அருள்பாலிக்கும் அண்ணன் பெருமாள், வடரெங்கம் ரெங்கநாதர், நாங்கூர் செம்பொன்னரங்கர் பெருமாள் ஆகிய கோயில்களிலும் பரமபத வாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.