எல்லை பிரச்னை! சீன துணை அதிபருடன் அஜித் தோவல் சந்திப்பு! சென்னையில் புதிதாக 130 ஏசி மின்சார பேருந்துகள்: முதல்வர் விஜய் தொடக்கி வைத்தார்!டெட் தேர்வில் இருந்து விலக்களிக்கக் கோரி அமைச்சர் ராஜ்மோகன் தனித் தீர்மானம்!ஓணம் திருநாள்: பிற்பகல் வரை செயல்படும் ரயில் முன்பதிவு மையங்கள்!சென்னையில் இரவு நேர மின்சார ரயில்கள் இன்று முதல் ரத்து!நீண்ட நாள்களுக்குப் பிறகு குறைந்த தங்கம் விலை!டெட் தேர்வில் இருந்து விலக்களிக்கக் கோரி அமைச்சர் ராஜ்மோகன் தனித் தீர்மானம்!

அனைவருக்கும் புயல் நிவாரணம் வழங்கக் கோரி நாகை மாவட்டத்தில் 4 இடங்களில் மார்க்சிஸ்ட் கம்யூ. ஆர்ப்பாட்டம்

கஜா புயலால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நிவாரணம் வழங்கக் கோரி, நாகை மாவட்டத்தில் 4 இடங்களில்

Published On :30 ஜனவரி 2024, 11:25 pm IST

கஜா புயலால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நிவாரணம் வழங்கக் கோரி, நாகை மாவட்டத்தில் 4 இடங்களில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் புதன்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
 கஜா புயலால் பாதிக்கப்பட்ட நாகை மாவட்டத்தைப் பேரிடர் பாதித்த மாவட்டமாக அறிவிக்கவேண்டும்; புயலால் பாதிக்கப்பட்டு  உயிரிழந்த கால்நடைகளுக்கு  உடனடியாக  நிவாரணம் வழங்கவேண்டும்; பாதிக்கப்பட்ட நெற்பயிர் ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் இழப்பீடு வழங்கவேண்டும்; வீடுகளுக்கு ரூ.25 ஆயிரம் நிவாரணம் வழங்கவேண்டும்; பாதிக்கப்பட்ட வீடுகளுக்குப் பதிலாக கான்கிரீட் வீடுகளை போர்க்கால அடிப்படையில் கட்ட அரசாணை வெளியிடவேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நாகை மாவட்டத்தில் நாகை,கீழ்வேளூர், திருக்குவளை மற்றும் வேதாரண்யம் ஆகிய 4 இடங்களில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நாகை: நாகை வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு  கட்சியின் நாகை ஒன்றியச் செயலாளர் பி.டி. பகு தலைமை வகித்தார். திருமருகல் ஒன்றியச் செயலாளர் எம். ஜெயபால், நாகை நகர செயலாளர் எம். பெரியசாமி, மாவட்டக் குழு உறுப்பினர்கள் பி.கே. ராஜேந்திரன்,  எம். சுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநிலக் குழு உறுப்பினரும், முன்னாள் எம்எல்ஏ-வுமான வி. மாரிமுத்து கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினர். இதில் 400-க்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டனர்.
கீழ்வேளூர்: கீழ்வேளூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு கட்சியின் ஒன்றியச் செயலாளர் ஜி. ஜெயராமன் தலைமை வகித்தார். நாகை மாவட்டச் செயலாளரும், முன்னாள் எம்எல்ஏ-வுமான நாகை மாலி, மாவட்டக் குழு உறுப்பினர்கள் எம்.என். அம்பிகாபதி, எம். செல்வராஜ், எம்.என். அபுபக்கர், எம்.சாந்தி, சிஐடியு மாவட்டச் செயலாளர் சீனி.மணி ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினர்.  
திருக்குவளை: திருக்குவளை வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் ஏ.வி.முருகையன் தலைமை வகித்தார். மாவட்டச் செயற்குழு உறுப்பினர் ஆர்.முத்துபெருமாள், ஒன்றிய நிர்வாகிகள் முருகையன் உள்ளிட்டோர் கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினர்.
வேதாரண்யம்: வேதாரண்யம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு கட்சியின் ஒன்றியச் செயலாளர் வி. அம்பிகாபதி தலைமை வகித்தார். மாவட்டச் செயற்குழு உறுப்பினர் வி. சுப்பிரமணியன் கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினார். 
இதில், ஒன்றியக் குழு உறுப்பினர்கள் பி.எஸ். பன்னீர் செல்வம், எ. வெற்றியழகன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.