மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகைமாநிலங்களவைத் தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாருக்கு காங்கிரஸ் ஆதரவுஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

தமிழின் பெருமையை பலரும் உணரவில்லை: நடிகை ரோகிணி

தமிழின் பெருமையை இன்னும் பலர் உணராமல் உள்ளனர் என, வேதாரண்யம் அருகே நடைபெற்ற அரிமா சங்க நிகழ்ச்சியில் பேசிய நடிகை ரோகிணி கூறினார்.

News image
Updated On :5 பிப்ரவரி 2018, 11:51 pm

DIN

தமிழின் பெருமையை இன்னும் பலர் உணராமல் உள்ளனர் என, வேதாரண்யம் அருகே நடைபெற்ற அரிமா சங்க நிகழ்ச்சியில் பேசிய நடிகை ரோகிணி கூறினார்.
நாகை மாவட்டம், வேதாரண்யத்தை அடுத்த தோப்புத்துறையில் அரிமா சங்க மண்டல மாநாடு ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு அரிமா சங்க மண்டலத் தலைவர் எஸ்.எஸ். தென்னரசு தலைமை வகித்தார்.
அரிமா சங்க மாவட்ட ஆளுநர் டாக்டர் எஸ். வீரபாண்டியன், நடிகர் பி. அஜய்ரத்தினம், நடிகை ரோகிணி ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாகப் பங்கேற்றுப் பேசினர். அரிமா சங்கத்தின் உடனடித் தலைவர் வெங்கட்ராமன், முதல் நிலை துணை ஆளுநர் ஷேக் தாவூத், இரண்டாம் நிலை ஆளுநர் கார்த்திக் பாபு, அவைச் செயலர் சந்தானம், பொருளாளர் மலர்விழி மாதவன், நிர்வாகி தில்லைவாணன், மேலாண்மைக் குழு புரவலர் எஸ். வேதநாயகம், தலைவர் அம்பாள் குணசேகரன், அரிவையர் சங்க நிர்வாகி மல்லிகா தென்னரசு உள்ளிட்டோர் பங்கேற்றுப் பேசினர். 
இம்மாநாட்டில்  நாகை, தஞ்சை, திருவாரூர், காரைக்கால், திருச்சி, புதுக்கோட்டை, கரூர், பெரம்பலூர், அரியலூர் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 110 சங்கங்களிலிருந்து 700-க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
கண்தானம் பெறுவதில் சிறப்பாக செயல்படும் வேதாரண்யம், ஆயக்காரன்புலம் பகுதி சங்க நிர்வாகிகளுக்கு பரிசளிக்கப்பட்டு, பாராட்டு தெரிவிக்கப்பட்டது. விழாவில் நடிகை ரோகிணி பேசியது:
ஆறாவது அறிவை பெற்றுள்ள மனித சமூகம்தான் அழிவுக்கான எல்லாவற்றையும் செய்துவிட்டு, அதிலிருந்து பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என்ற முரண்பாடுகளோடு இருக்கிறது. குறிப்பாக மது, புகை என ஆபத்தை தரக் கூடியவற்றை உற்பத்தி செய்துவிட்டு, அது கெடுதல் என பாதுகாத்துக் கொள்ளவும் எச்சரிக்கிறோம். இந்த முரண்பாடுகளிலிருந்து விடுபட பிறர் மீது அன்பு செலுத்துவது மட்டுமே தீர்வாகும்.
நல்ல புத்தகங்களும், ஆசான்களுமே ஒரு மனிதனின் மூளையை மேம்படுத்தி, அறிவுக் கூர்மையை வெளிப்படுத்துகிறது. நான் அடிப்படையில் தெலுங்கு பெண் என்றாலும், தமிழில் பேசுவதுதான் எனது மன ஓட்டம். தமிழ் நாட்டில் பிறப்பதே பாக்கியம் என்ற ரோகிணி , தமிழின் பெருமையை இன்னும் பலரும் உணரவில்லை என்றார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.