பிற கட்சிகளிலிருந்து விலகியவர்கள் பாமகவில் இணையும் நிகழ்ச்சி
திருவெண்காட்டில் பல்வேறு கட்சிகளிலிருந்து விலகியவர்கள் பா.ம.க. வில் இணையும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.


திருவெண்காட்டில் பல்வேறு கட்சிகளிலிருந்து விலகியவர்கள் பா.ம.க. வில் இணையும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
திருவெண்காடு பகுதியில் பல்வேறு கட்சிகளிலிருந்து விலகிய சுமார் 100 பேர், முன்னாள் ஒன்றியக் குழு உறுப்பினர் நடராஜன் தலைமையில் பா.ம.க.வில் இணையும் நிகழ்ச்சி, நாகை வடக்கு மாவட்ட பா.ம.க. செயலாளர் லண்டன் அன்பழகன் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட அமைப்புச் செயலாளர் ராஜரத்தினம் முன்னிலை வகித்தார். மாவட்ட துணைச் செயலாளர் சங்கர் வரவேற்றார்.
நிகழ்ச்சியில் பா.ம.க. மாநில துணைப் பொதுச் செயலாளர் பழனிசாமி கலந்து கொண்டு, கட்சியில் இணைந்தவர்களை சால்வை அணிவித்து வரவேற்றார். இதில், முன்னாள் ஒன்றியச் செயலாளர் தேக்கு தியாகராஜன், ஒன்றியத் தலைவர் கார்த்திக், இளைஞரணி செயலாளர் சுமன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஒன்றியச் செயலாளர் ராஜீவ்காந்தி நன்றி கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...