நாகையைச் சேர்ந்த பெண் அதிகளவிலான மாத்திரைகளை உட்கொண்டு சனிக்கிழமை இரவு தற்கொலைக்கு முயன்றார். இவரது தற்கொலை முயற்சிக்குக் கந்துவட்டிக் கொடுமை காரணம் எனக் கூறப்படுகிறது.
நாகை பெருமாள் கோயில் தெற்கு மடவிளாகம் பகுதியைச் சேர்ந்த பாலகுமார் மனைவி தேன்மொழி(33). இவர், சனிக்கிழமை இரவு வீட்டிலிருந்த காய்ச்சல் மற்றும் பிற நோய்களுக்கான மாத்திரைகளை அதிகளவில் உட்கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். அவருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டதையடுத்து, நாகை அரசு மருத்துமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார்.
இவர், வெளிப்பாளையம் பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணிடம் பணம் கடன் வாங்கியிருப்பதாகவும், அந்தப் பெண் தேன்மொழிக்கு கந்துவட்டி கொடுமை அளித்ததால் மனமுடைந்த தேன்மொழி தற்கொலைக்கு முயன்றதாகவும் கூறப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.