சீர்காழியில், சிதம்பரம் நெடுஞ்சாலையில் ரூ. 15 லட்சத்தில் புதிய பாலம் கட்டும் பணி தொடங்கியதை நெடுஞ்சாலைத்துறை கோட்டப் பொறியாளர் புதன்கிழமை ஆய்வு செய்தார்.
சீர்காழி - சிதம்பரம் நெடுஞ்சாலையில் நகரின் மையப் பகுதியில் கொள்ளிடமுக்கூட்டு அருகே கழுமலையாறு பிரிவு வாய்க்காலான பெரம்பன்னை பாசன வாய்க்காலின் குறுக்கே சுமார் 60 ஆண்டுகள் பழைமையான குறுகிய பாலம் இருந்தது. பிரதான, போக்குவரத்து நிரம்பிய நெடுஞ்சாலையில் இருந்த இப்பாலத்தை அகற்றிவிட்டு புதிய பாலம் கட்ட வேண்டும் என வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இதைத்தொடர்ந்து, நெடுஞ்சாலைத்துறை சார்பில் புதிய பாலம் கட்ட ரூ. 15 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் தொடங்கின.
முன்னதாக, பழைய பாலத்தை முழுமையாக இடித்து அகற்றும் பணி செவ்வாய்க்கிழமை இரவு பகலாக நடைபெற்று நிறைவடைந்தது.
இதையடுத்து, புதிய பாலம் கட்டுவதற்கு சிமென்ட் அடிதளம் அமைக்க இயந்திரம் மூலம் சிமென்ட் கலவை தயார் செய்து கொட்டும் பணி நடைபெற்றது.
இந்தப் பணியை நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் இளம்வழுதி, உதவி செயற்பொறியாளர் சூரியமூர்த்தி, உதவி பொறியாளர் பிரவிணா ஆகியோர் புதன்கிழமை பார்வையிட்டனர். தொடர்ந்து, அப்பகுதியில் முகாமிட்டு பாலம் கட்டும் பணியை விரைவுபடுத்தினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.