ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

தமிழ்நாட்டுக் கல்வி இயக்கத்தினர் ஆர்ப்பாட்டம்

உலகத் தாய் மொழி தினத்தை முன்னிட்டு, பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாட்டுக் கல்வி இயக்கத்தினர் மயிலாடுதுறையில் புதன்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

News image
Updated On :22 பிப்ரவரி 2018, 3:52 am

DIN

உலகத் தாய் மொழி தினத்தை முன்னிட்டு, பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாட்டுக் கல்வி இயக்கத்தினர் மயிலாடுதுறையில் புதன்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கிட்டப்பா அங்காடி முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, தமிழ்நாட்டுக் கல்வி இயக்க நாகை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சுப்பு. மகேசு தலைமை வகித்தார். 
தமிழே கல்வி மொழியாக இருக்கவேண்டும், தமிழ் வழியில் படித்தவர்களுக்கு மட்டுமே வேலை  வழங்க வேண்டும், தமிழ்நாட்டிற்கே கல்வி உரிமை ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் த. ஜெயராமன், தமிழர் தேசிய முன்னணி நாகை மாவட்டத் தலைவர் இரா. முரளிதரன்,  திராவிடர் விடுதலைக் கழக தலைமை செயற்குழு உறுப்பினர் இளையராஜா, சாதி ஒழிப்பு கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் இளங்கோவன், எஸ்டிபிஐ நாகை மாவட்டத் தலைவர்  ஷபீக் அஹமது உள்ளிட்டோர் கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினர். 
இந்த ஆர்ப்பாட்டத்தில் 30-க்கும் மேற்பட்டோர்  கலந்துகொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.