தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

வேதாரண்யம் - வாய்மேடு சாலையில் பள்ளங்களை சீரமைக்கக் கோரிக்கை

நாகை மாவட்டம், வேதாரண்யம் - வாய்மேடு நெடுஞ்சாலையில் விபத்துகள் ஏற்படும் அளவில் உள்ள பள்ளங்களை  சீரமைக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

News image
Updated On :22 பிப்ரவரி 2018, 3:52 am

DIN

நாகை மாவட்டம், வேதாரண்யம் - வாய்மேடு நெடுஞ்சாலையில் விபத்துகள் ஏற்படும் அளவில் உள்ள பள்ளங்களை  சீரமைக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வேதாரண்யம் - வாய்மேடு (திருத்துறைப்பூண்டி) பிரதான சாலையானது மாநில நெடுஞ்சாலைத்துறை பராமரிப்பில் உள்ளது. நவம்பர் மாதத்தில் ஏற்பட்ட தொடர் மழையின்போது இந்த சாலையில் மழைநீர் தேங்கிய பகுதிகளில் தார்ச் சாலை உறுதித்தன்மையை இழந்தது. இதனால் ஏற்பட்ட பள்ளங்கள் இதுநாள் வரை முறையாக சீரமைக்கப்படவில்லை. ஆனால், தார்ச் சாலையை சீரமைக்க ஒப்பந்தப் பணிகள் மேற்கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது. இந்தப் பணிகளை மேற்கொள்ளும் காலம் வரை காத்திருக்காமல்,  ஆபத்தான பள்ளங்களையாவது தாற்காலிகமான முறையிலாவது சீரமைக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.