வீட்டு உபயோக சமையல் எரிவாயு விலை ரூ. 29 அதிகரிப்பு! தமிழகம் முழுவதும் இன்று மாலை 6 வரை மின் கட்டண சேவைகள் இயங்காது கொசோவோ, ஆா்மீனியாவில் இன்று நாடாளுமன்றத் தோ்தல் நீட் மறுதோ்வு வினாத்தாள் கசிந்ததாக வதந்தி: என்டிஏ எச்சரிக்கை அணுசக்தித் துறையில் பொருத்தமான கூட்டாளி இந்தியா: அமெரிக்க அணுசக்தி கூட்டமைப்புத் தலைவா்இந்திய வம்சாவளியினருக்கு எதிரான சமூக ஊடகப் பதிவுகள் முடக்கம்: சிங்கப்பூா் அரசு உத்தரவு
/

சீர்காழி நெல் திருவிழா: 2-ஆம் நாளில் திரளானோர் பங்கேற்பு

நாகை மாவட்டம், சீர்காழியில் நடைபெற்று வரும் நெல் திருவிழாவின் 2-ஆம் நாளான ஞாயிற்றுக்கிழமை பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த திரளான விவசாயிகள் பங்கேற்றனர்.

Updated On :23 ஜூலை 2018, 5:43 am IST

நாகை மாவட்டம், சீர்காழியில் நடைபெற்று வரும் நெல் திருவிழாவின் 2-ஆம் நாளான ஞாயிற்றுக்கிழமை பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த திரளான விவசாயிகள் பங்கேற்றனர்.
சீர்காழியில் நலம் பாரம்பரிய விவசாய அறக்கட்டளையின் சார்பில், மாநில அளவிலான 2 நாள் நெல் திருவிழா சனிக்கிழமை தொடங்கியது. ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற 2-ஆம் நாள் நிகழ்ச்சிக்கு அறக்கட்டளைத் தலைவர் ரெங்கராஜன் தலைமை வகித்தார்.
நம்மாழ்வார் விருதுபெற்ற இயற்கை விவசாயி வரதராஜன், சங்க சட்ட ஆலோசகர் எஸ். சுந்தரய்யா, பொறுப்பாளர்கள் கரு. முத்து, அபாஸ்அலி, எழில்மலர் மெட்ரிக். பள்ளி பொருளாளர் அன்பழகன், திருக்குறள் பண்பாட்டுப் பேரவை பொருளாளர் முத்துக்கருப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
"மருந்தில்லா மருத்துவம்' என்ற தலைப்பில் ஹீலர்பாஸ்கர், "இயற்கை வழியில் இனிய சுகப்பிரசவம்' என்ற தலைப்பில் மருத்துவர் ரேகா, "நீர் மேலாண்மை' என்ற தலைப்பில் பிரிட்டோராஜ் ஆகியோர் கருத்துரை வழங்கினர். நாட்டு மாடுகளின் சிறப்புகள் குறித்து மோகன்ராஜ், இயற்கை வேளாண்மையும், விற்பனை வாய்ப்பும் என்ற தலைப்பில் வரதராஜன் ஆகியோர் பேசினர்.
இதைத்தொடர்ந்து, "இன்றைய விவசாயத்தின் நிலைமை' என்ற தலைப்பில், தமிழ்நாடு விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்புக்குழுத் தலைவர் பி.ஆர். பாண்டியன் பேசியது:
நாட்டில், மக்கள்தொகையைக் காட்டிலும் நோய்களின் எண்ணிக்கை அதிகரித்துவிட்டன. இங்கு உற்பத்தி செய்யப்படும் சர்க்கரை தரமானதாக இல்லை என்று சொல்கிறார்கள். நமக்கு தேவையான சர்க்கரையை, இங்கேயே அனுமதிபெற்று ஆலை வைத்திருப்பவர்கள், தங்கள் ஆலையின் பெயரிலேயே வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்து விற்பனை செய்கிறார்கள்.
நம்மால் உற்பத்தி செய்யப்பட்ட சர்க்கரையை ஆலை நிர்வாகம் கொள்முதல் செய்யவும், அரசு நிர்ணயித்த தொகையை தரவும் தயாராக இல்லை. உற்பத்திச் செலவைக் கணக்கிட்டு விலையை நிர்ணயம் செய்ய அரசும் தயாராக இல்லை. குவிண்டால் நெல்லுக்கு ரூ.200 உயர்த்தி கொடுத்திருப்பது போதுமானதாக இல்லை.
விவசாயிகள் உற்பத்தி செய்யும் பொருள்களுக்கு லாபகரமான விலை நிர்ணயிக்கப்பட வேண்டும். உற்பத்தி செலவைக் கணக்கிட்டு அந்த செலவில் 50 சதவீதத்தை இணைத்து, விலையை நிர்ணயம் செய்ய வேண்டுமென எம்.எஸ். சுவாமிநாதன் குழு பரிந்துரைத்தது. ஆனால், அரசு இதை செயல்படுத்தவில்லை என்றார் பி.ஆர். பாண்டியன்.
விழாவில், கடலூர், விழுப்புரம், சேலம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்து விவசாயச் சங்கப் பிரதிநிதிகளும், விவசாயிகளும் பங்கேற்றனர். மேலும், மாடித்தோட்டம் அமைப்பது, இயற்கைவழி உணவு தானியங்கள், சிறுதானியங்கள், சொட்டுநீர்ப் பாசனம் குறித்த செயல்முறை விளக்கங்கள் அளிக்கப்பட்டன. அத்துடன், மாப்பிள்ளை சம்பா, கருப்பு கவுனி, திணை ஆகியவற்றில் தயாரிக்கப்பட்ட பிஸ்கெட்டுகள், குழிப்பணியாரங்கள் உள்ளிட்ட கடைகள் இடம்பெற்றிருந்தன. சங்கச் செயலாளர் இரா. சுதாகர் நன்றி கூறினார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.