அதிக கட்டணம் வசூலிக்கும் தனியார் பள்ளிகள் குறித்து புகார் தெரிவிக்க தொலைபேசி எண்கள் அறிவிக்க வேண்டும் என அகில இந்திய மக்கள் நலக் கழகம் வலியுறுத்தியுள்ளது.
செம்பனார்கோவில் அருகேயுள்ள மேலப்பாதியில், அகில இந்திய மக்கள் நலக் கழகத்தின் ஒன்றிய நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. ஒன்றிய தொழிலாளர் அணி தலைவர் மூர்த்தி தலைமை வகித்தார். ஒன்றிய மகளிரணி தலைவி விஜயா முன்னிலை வகித்தார். மாவட்ட அமைப்பாளர் இளையராஜா வரவேற்றுப் பேசினார். மண்டலத் தலைவர் செந்தில் சிறப்புரையாற்றினார்.
தீர்மானங்கள்:
சுதந்திர தினத்தன்று அனைத்து ஊராட்சிகளிலும் நடைபெறும் கிராம சபைக் கூட்டத்தில், சமூக ஆர்வலர்களிடமும், பொதுமக்களிடமும் கிராம வளர்ச்சித் திட்டங்கள் குறித்து அதிகாரிகள் கலந்தாலோசிக்க வேண்டும். செம்பனார்கோவில் காவல் நிலையத்தில் காலியாக உள்ள காவல் ஆய்வாளர் பணியிடத்தை நிரப்ப வேண்டும். அரசு அறிவித்த கட்டணங்களை விட அதிக கட்டணம் வசூலிக்கும் தனியார் மெட்ரிக் பள்ளிகள் குறித்து புகார் தெரிவிக்க, மாவட்ட நிர்வாகம் தொலைபேசி எண்கள் அறிவிக்க வேண்டும். தாட்கோ மற்றும் பாரத பிரதமர் சுயவேலை வாய்ப்புத் திட்டத்தில் சுயதொழில் தொடங்க விண்ணப்பிப்பவர்களுக்கு வங்கிகள் நிபந்தையின்றி கடன் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் மாவட்ட, ஒன்றிய மற்றும் கிளை கழகப் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர். ஒன்றியத் தலைவர் ராஜ்குமார் நன்றி கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஆமைகள் மூலம் பண்டைய கடல் வழித்தடங்களை கண்டறியலாம்: வனத் துறை கூடுதல் தலைமைச் செயலா் சுப்ரியா சாகு

சிறுமி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: சென்னைக்கு மாற்றி உத்தரவு

மெட்ரோ ரயிலில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்றவா் மீட்பு

ரூ.53.18 லட்சம் தங்கப் பசை பறிமுதல்: விமான நிலை ஊழியா் கைது
விடியோக்கள்

நயினார் நாகேந்திரன் காமெடிதான் பேசுவார்! செங்கோட்டையன் விமர்சனம் | TVK | BJP

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!


