ரோஹித் சர்மா சதம் வீண்! இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரையும் இழந்தது இந்தியா!திரைப்பட எழுத்தாளர் சங்கத் தேர்தலில் சேரன் அணி வெற்றி!உடனடியாக போராட்டக் களத்திற்கு வாருங்கள்! இளைஞர்களை அழைத்த அபிஜீத் தீப்கே!உலகக்கோப்பையில் அதிக கோல்கள் அடித்து சாதனை படைத்த எம்பாப்பே! அஸ்ஸாமில் சோனம் வாங்சுக்கின் படத்தை வரைந்த 2 பேர் கைது சோனம் வாங்சுக்கை வேறு மருத்துவமனைக்கு மாற்றக் கோரிய வழக்கு ஒத்திவைப்பு!யார் வெற்றி பெற்றாலும் கால்பந்து ரசிகர்கள் பொறுமையை இழக்கக் கூடாது: கர்நாடக முதல்வர் சென்னையில் 2 நாட்கள் மழைக்கு வாய்ப்பு
/

நூறு நாள் வேலை கோரி ஆர்ப்பாட்டம் செய்து மனு அளித்த மக்கள் அதிகாரம் பெண்கள்

நாகை மாவட்டம், வேதாரண்யத்தில் நூறு நாள் வேலை வழங்க வலியுறுத்தி, மக்கள் அதிகாரம் அமைப்பைச் சேர்ந்த நுற்றுக்கும் மேற்பட்ட

Updated On :26 ஜூன் 2018, 8:24 am IST

நாகை மாவட்டம், வேதாரண்யத்தில் நூறு நாள் வேலை வழங்க வலியுறுத்தி, மக்கள் அதிகாரம் அமைப்பைச் சேர்ந்த நுற்றுக்கும் மேற்பட்ட   பெண்கள் ஆர்ப்பாட்டம் செய்து அதிகாரிகளிடம் திங்கள்கிழமை மனு அளித்தனர்.
வேதாரண்யம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் எதிரே மகாத்மா காந்தி நூறு நாள் வேலை உறுதியளிப்புத் திட்டத்தை செயல்படுத்தக் கோரி வட்டார வளர்ச்சி அலுவலர்களிடம் மனு அளித்தனர்.
இதில், வேதாரண்யத்தை அடுத்த அண்டர்காடு, ஆதனூர் கிராமங்களைச் சேர்ந்த மக்கள் அதிகாரம் அமைப்பின் பெண்கள் பாதுகாப்புக் குழுத் தலைவி எஸ். செல்வி தலைமையிலான நூற்றுக்கும் மேலான பெண்கள்  பங்கேற்றனர்.
அவர்கள் அளித்த மனுவில் நூறுநாள் வேலை மறுக்கப்படுவதால் வேறு கூலி வேலை இல்லாமல் அவதியுறுவதாகவும், இந்த நிலை நீடித்தால் குழந்தைகளோடு தற்கொலைக்குத் தள்ளப்படும் அபாயச் சூழல் ஏற்பட்டுள்ளதாகவும் அதில் தெரிவித்தனர்.
சிறிது நேரம் முழக்கமிட்ட பெண்கள் காவல்துறை தொடர்ந்து அனுமதி மறுத்ததால் கோரிக்கை மனுவை அளித்துவிட்டுச் சென்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.