மத்திய படை தாக்குதலில் வாக்காளர் பலி - திரிணமூல் காங்கிரஸ் குற்றச்சாட்டுதவெக : 98 - 120 இடங்களில் வெற்றி வாய்ப்பு: இந்தியா டுடே - ஆக்ஸிஸ் மை இந்தியா கருத்துக் கணிப்புதமிழ்நாட்டில் தவெக ஆட்சி அமைக்கும்: இந்தியா டுடே - ஆக்சிஸ் மை இந்தியா கருத்துக் கணிப்புஎங்கே தவறு நடந்தது? முதல் தோல்வி குறித்து பஞ்சாப் கிங்ஸ் கேப்டன் பதில்!
/

குட்டிக் குழந்தைகளின் சாதனை முயற்சி: ஒன்றரை மணிநேரத்தில் ஆயிரம் விதைப் பந்துகள் தயாரிப்பு

சீர்காழி மழலையர் பள்ளியில் பயிலும் குட்டிக் குழந்தைகள், சாதனை முயற்சியாக ஆயிரம் விதைப் பந்துகளை ஒன்றரை மணிநேரத்தில் தயாரித்தனர்.

Updated On :29 மார்ச் 2018, 4:00 am

சீர்காழி மழலையர் பள்ளியில் பயிலும் குட்டிக் குழந்தைகள், சாதனை முயற்சியாக ஆயிரம் விதைப் பந்துகளை ஒன்றரை மணிநேரத்தில் தயாரித்தனர்.
மரங்கள் வெட்டப்படுவதைத் தடுக்கவும், மரக்கன்றுகள் நடுவதன் அவசியத்தை வலியுறுத்தியும், சீர்காழி விஷன்பிளே மழலையர் பள்ளி சார்பில் ஆயிரம் மரக்கன்றுகள் உருவாக்கத் திட்டமிடப்பட்டது. அதன்படி, சாதனை முயற்சியாக இப்பள்ளியில் பயிலும் குட்டிக் குழந்தைகள் 30 பேர், சுமார் ஒன்றரை மணிநேரத்தில் ஆயிரம் விதைப் பந்துகளைத் தயார் செய்தனர். இந்த விதைப் பந்துகளை வரும் கோடை விடுமுறையில் விதைக்கும் வகையில், அனைத்து குழந்தைகளுக்கும் விநியோகிக்கப்பட்டன. இதற்கான ஏற்பாடுகளை பள்ளித் தாளாளர் மலர்க்கொடி, ஆசிரியர் ஜேக்கப் ஞானசெல்வன் மற்றும் ஆசிரியர்கள் செய்திருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.