நீடூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி ஜன்னல் கதவை உடைத்து சேதப்படுத்தியதாக அமமுகவைச் சேர்ந்த 3 பேர் மீது மயிலாடுதுறை போலீஸார் புதன்கிழமை வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
நீடூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் இயக்குநர்கள் பதவிக்காக வேட்பு மனுக்கள் அளித்த அமமுகவைச் சேர்ந்த அருள், ராமலிங்கம், ராமையன் ஆகியோரின் வேட்பு மனுக்கள் உரிய காரணமின்றி நிராகரிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக புதன்கிழமை வங்கிக்கு சென்று விளக்கம் கேட்டபோது, அமமுக வினருக்கும் தேர்தல் அலுவலருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது, அமமுகவினர் வங்கியின் ஜன்னல் கதவை சேதப்படுத்தியதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து, வங்கிச் செயலர் ரா. பரதன் (51) வங்கி ஜன்னல் கதவு சேதப்படுத்தி, பணி செய்யவிடாமல் தடுத்ததாக மயிலாடுதுறை காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் போலீஸார் அமமுகவைச் சேர்ந்த எஸ். செந்தமிழன், ரா. ராஜா, அருள் ஆகியோர் மீது வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

5 மாநில பேரவைத் தேர்தல்கள்! கருத்துக் கணிப்பு முடிவுகள் - உடனுக்குடன்!

கேரளத்திலும் ஆட்சி இழக்கிறதா மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்?

உச்சத்தில் மாருதி சுஸுகி பங்குகள்!

ரோஹித் சர்மா எப்போது விளையாடுவார்? மும்பை கேப்டன் பதில்!
வீடியோக்கள்

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

கூலி பவர்ஹவுஸ்!
இணையதளச் செய்திப் பிரிவு

