மயிலாடுதுறையில் புதன்கிழமை வெவ்வேறு சம்பவங்களில் இருவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டனர்.
மயிலாடுதுறை கலைஞர் காலனியைச் சேர்ந்த மாயக்கிருஷ்ணன் மகன் ஏழுமலை (25). இவர், சீர்காழி நகராட்சியில் துப்புரவுப் பணியாளராக வேலைப்பார்த்து வந்தார்.இந்நிலையில், கடந்த சில நாள்களாக வேலைக்குப் போகாமல் இருந்தவரை வீட்டில் இருந்தவர்கள் கண்டித்தனராம். இதில் மனமுடைந்த ஏழுமலை செவ்வாய்க்கிழமை வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
மற்றொரு சம்பவம்: இதேபோல், மயிலாடுதுறை ரஸ்தா மணவெளித்தெருவைச் சேர்ந்தவர் ஆ. ஜவஹர்(42). திருமணமானவர். குடிப்பழக்கம் உள்ள இவரை மனைவி கண்டித்ததாகக் கூறப்படுகிறது. இதில் மனமுடைந்த ஜவஹர் வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து மயிலாடுதுறை போலீஸார் தனித்தனியாக வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வழக்குரைஞராக பேரறிவாளன் பதிவு: காங்கிரஸ் கண்டனம்; பாா் கவுன்சில் விளக்கம்

திருவெற்றியூா் பாகம்பிரியாள் கோயிலில் சித்திரைத் திருவிழா தேரோட்டம்

கவிஞா்கள் ஒக்கூா் மாசாத்தியாா், கணியன் பூங்குன்றனுக்கு அரசு மரியாதை

ஜாதி, மதம் அற்றவா் என்பதை தெரிவிக்க சான்று அவசியம் இல்லை: உயா்நீதிமன்றம் கருத்து
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

